"நீ இறங்கி போ பையா".. டிக்கெட் இன்றி ரயிலில் சென்ற வடமாநில தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய போலீஸ்
2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் அந்த தொழிலாளர்கள் வந்து அமர்ந்தனர். டிக்கெட் இல்லாமல் ஏறிய அந்த பயணிகள், அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்தனர். இதனால் டிக்கெட் வாங்கி பயணம் செய்பவர்களுக்கு உட்கார கூட இடம் இல்லாத நிலை
சேலம்: கேரளாவில் இருந்து ஜார்க்கண்ட் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களை சேலம் அருகே பாதி வழியில் போலீஸார் இறக்கிவிட்டனர்.
டிக்கெட் இல்லாமலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டும் முன்பதிவு பெட்டியில் ஏறி அந்த தொழிலாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பயணிகள் கொடுத்த புகாரை அடுத்து ரயில்வே போலீஸார் களத்தில் இறங்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கீழே இறங்கச் செய்துள்ளனர்.

தொடரும் சம்பவங்கள்
சமீபகாலமாகவே பீகார், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் படையெடுத்து வருகிறார்கள். இவ்வாறு தென் மாநிலங்களுக்கு வந்து செல்லும் இவர்கள், ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அண்மையில் கூட சென்னை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் டிக்கெட் இன்றி பயணித்த வட மாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து இறக்கிவிடப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்
அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் சேலத்தில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் சேலம் ரயில்வே நிலையத்துக்கு பிற்பகல் 2.50 மணிக்கு வந்துள்ளது. பின்னர் 5 நிமிடங்கள் கழித்து ரயில் புறப்பட்டது. அந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் அந்த ரயிலில் ஏறினர்.

டிக்கெட் இல்லாமல்..
அப்போது, 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் அந்த தொழிலாளர்கள் வந்து அமர்ந்தனர். டிக்கெட் இல்லாமல் ஏறிய அந்த பயணிகள், அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்தனர். இதனால் டிக்கெட் வாங்கி பயணம் செய்பவர்களுக்கு உட்கார கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கும், வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாதி வழியில் இறக்கிய போலீஸார்
இதன் தொடர்ச்சியாக, சேலம் கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட பிற பயணிகள், வட மாநிலத்தவரின் இந்த அராஜகம் தொடர்பாக புகார் அளித்தனர். இதன்பேரில், சேலம் அருகே தின்னப்பட்டி பகுதியில் அந்த ரயிலை நிறுத்திய ரயில்வே போலீஸார், வடமாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, டிக்கெட் இல்லாமல் பயணித்த 112 பேரை போலீஸார் கீழே இறக்கிவிட்டனர். பின்னர், ஈரோடு - ஜோலார்பேட்டை ரயிலில் அவர்களை போலீஸார் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications