Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியின் இரும்பு கோட்டைக்குள்ளேயே புகுந்த ஓபிஎஸ்.. இங்க பாருங்க போஸ்டர்களை.. அதிரும் சேலம்

சேலம் மாநகர் முழுவதும் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும் அதிமுக தொண்டர்கள் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சேலம்: எடப்பாடி பழனிச்சாமியின் இரும்பு கோட்டைக்குள் புகுந்து ஓட்டை போட்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அவரது ஊரிலேயே அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்ட வைத்து அதிர வைத்திருக்கிறார். அதுவும் எப்படி ஓபிஎஸ் இன்றி ஓர் அணுவும் அசையாது என்று குறிப்பிட்டிருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் தலைமை பதவியை கைப்பற்ற போவது யார்? என்ற போட்டியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையிலேயே புதுவிதமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்

ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்

கடந்த பல நாட்களாகவே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே போஸ்டர் யுத்தம் நீடித்து வருகிறது. பல ஊர்களில் இன்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஓ.பன்னீர் செல்வம் தலைமையேற்க வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டுகின்றனர்.

அணுவும் அசையாது

அணுவும் அசையாது

அஇஅதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் இன்றி ஓர் அணுவும் அசையாது..தொண்டர்கள் சொல் கேளாமல் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டிக்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் சேலம் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. கழகத்தின் கடைக்கோடி தொண்டன் சேலம் ரவி என்று போஸ்டர் அடித்தவர் தனது பெயரை குறிப்பிட்டுள்ளார்.

 ஓபிஎஸ் நகர்வு

ஓபிஎஸ் நகர்வு

அதிமுக சட்ட விதிகளின் படி எடப்பாடி பழனிச்சாமியும்அவரது ஆதரவாளர்களும் செயல்படவில்லையென்று பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் அளித்திருக்கும் நிலையில் அதிமுகவின் சட்ட விதிகளின் படியே நாங்கள் நடந்து கொண்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் மனு

உச்சநீதிமன்றத்தில் மனு

உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலு சேர்க்க உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சேலத்தில் போஸ்டர்

சேலத்தில் போஸ்டர்

இருப்பினும், ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக ஆவதற்கான ஆயத்த பணிகள் திரைமறைவில் எடப்பாடி பழனிசாமி அணியினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சேலத்தில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூரசம்ஹாரத்திற்கு பதிலடி

சூரசம்ஹாரத்திற்கு பதிலடி

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடந்த வாரம் கையில் வேலுடன் சூரசம்ஹாரம் என்று போஸ்டர் அடித்திருந்தனர். அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களை தனது வசப்படுத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக கூறுகிறார் ஓ.பன்னீர் செல்வம். இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டவர்கள் இன்றைக்கு தலைமைப் பதவிக்காக பிரிந்து நிற்கின்றனர். சண்டை சச்சரவு இன்றி செயல்பட வேண்டும் என்று அதிமுகவின் உண்மை தொண்டர்கள் விரும்புகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+