இப்படி பண்ணலாமா? அதுவும் எடப்பாடி வீடு பக்கத்துலேயே..ஓபிஎஸ் "அதிரடியால்" அதிமுக அதிர்ச்சி! என்னாச்சு
சேலம்: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்து கொண்டு இருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் இரண்டு தரப்பின் ஆதரவாளர்களும் களத்தில் கொதிப்புடன் காணப்படுகிறார்கள்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை இல்லை. எல்லாம் நன்றாகத்தானே போய்கொண்டு இருக்கிறது. ஏன் ஒற்றை தலைமை என்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்.. கண்ணாடி முன் மனகுமுறல்களை போட்டு உடைப்பது போல பட்டு பட்டென்று பேசிவிட்டு சென்று இருக்கிறார்.
ஓபிஎஸ்ஸின் இந்த பளீர் பேட்டியை பார்த்து அதிமுக நிர்வாகிகள் கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறார்களாம். அவரை எளிதாக சமாளித்துவிடலாம் என்று நினைத்த எடப்பாடி தரப்பும் கொஞ்சம் ஜெர்க்காகி இருக்கிறதாம்.

சமாதானம்
ஓபிஎஸ் பேட்டி குறித்து நேற்று இரவும், இன்று அதிகாலையும் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளார். ஓபிஎஸ்சை எப்படி சமாளிப்பது. அவரை எப்படி சமாதானம் செய்வது என்று எடப்பாடி ஆலோசனை செய்துள்ளார். இன்று திருவண்ணாமலை செல்லும் எடப்பாடி அங்கு நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். அதன்பின் அவர் நிர்வாகிகள் முன் உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தால் முக்கியமான அறிவிப்புகள் சிலவற்றை வெளியிடுவார், ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போஸ்டர்
இது ஒரு பக்கம் இருக்க ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே போஸ்டர் யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. ஒற்றை தலைமையே! என்ற வாசகத்தோடு சென்னையில் பல இடங்களில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. முக்கியமாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக அதிக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக நேற்றே நாம் exclusive செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம். அதன்படி, இன்று தமிழ்நாடு முழுக்க தனக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்ட ஏற்பாடு செய்து இருக்கிறாராம். அதிமுக தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் மனதில்தான் தான்தான் ஒற்றை தலைமை என்பதை நிரூபிக்கும் விதமாக போஸ்டர் ஒட்ட போகிறார் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

ஒற்றை தலைமை
இதுவரை ஒட்டப்பட்ட போஸ்டர் போல அல்லாமல்.. இன்று ஒட்டப்பட்ட உள்ள போஸ்டரில் சிலரை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி வாசகங்கள் இருக்குமாம். அதோடு ஜெயலலிதா குறித்தும் வலுவான வாசகங்கள் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதன்படியே இன்று கொங்கு மண்டலத்தில் பல இடங்களில் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. முக்கியமாக சேலத்தில் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

எடப்பாடி வீடு அருகே
முக்கியமாக எடப்பாடி வீட்டிற்கு அருகிலும் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதோடு சேலம் 5 ரோடு ஜங்ஷன், நெடுஞ்சாலை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. நாம் குறிப்பிட்டது போலவே இந்த போஸ்டரில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே
ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை வழி நடத்திட வாருங்கள் - இங்கணம் சேலம் மாநகர மாவட்ட கழக உண்மை விசுவாசிகள் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

எடப்பாடி ஆதரவு
எடப்பாடி வீடு இருக்கும் பகுதியிலேயே இப்படி போஸ்டர் ஒட்டப்பட்டதை பார்த்து அவரின் ஆதரவாளர்கள் அப்செட் ஆகி இருக்கிறார்களாம். இதனால் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை கிழித்து எறிந்து கீழே வீசி உள்ளனர். ஏற்கனவே சென்னையில் ஓபிஎஸ் மகன் விபி ஜெயபிரதீப் முன்னெடுப்பில் நேற்று அதிகாலை பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. எடப்பாடிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்கள் யாரும் தீர்மானம் நிறைவேற்றும் முன் தனக்குத்தான் ஆதரவு அதிகம் என்று காட்டும் விதமாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறதாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications