அதிமுகவுக்கு தான் ஓட்டு கேட்பேன்..எனக்குன்னு ஆசையில்லை! ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு? அதகள அதிமுக
சேலம்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருக்கக் கூடிய விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் பெருந்தன்மையோடு பேச வேண்டும் எனவும், தேர்தலில் அதிமுகவிற்கு மட்டுமே வாக்கு கேட்பேன் எனக்கென்று தனி இலக்கு எதுவுமில்லை, அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பதே என் இலக்கு என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," சட்டமன்ற தேர்தலையொட்டி தேவையான நேரத்தில் என்னுடைய கருத்தை தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை பிரிந்துள்ள அதிமுக அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம்
அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெறுகின்ற சூழ்நிலை உருவாகும் இதுதான் என்னுடைய நிலைப்பாடு இதை புரிந்து கொள்ள வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக இல்லாமல், அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே எனது எண்ணம். அண்ணா திமுகவை எம்ஜிஆர் தொண்டர் இயக்கமாகத்தான் உருவாக்கினார்.
அதிமுக ஒற்றுமை
மக்கள் இயக்கம் ஆகத்தான் அதிமுக என்றைக்கும் செயல்படும். இந்த இயக்கத்தை யாராவது பிளவு படுத்த நினைத்தால் அது யாராலும் முடியாது. அதிமுக இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வராக வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது. மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. கூட்டணி குறித்து கேட்டதற்கு தேர்தலின் போது தான் முடிவு தெரியும். அதற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ளன.
அண்ணா திமுக
அதிமுக பொருத்தவரை இந்த இயக்கம் 50 ஆண்டுகாலம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அதிமுகவை மக்கள் மக்கள் இயக்கமாக வழி நடத்தினார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் இயங்க வேண்டும். அதிமுகவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அம்மா அவர்களும் வகுத்துக் கொடுத்த சட்ட விதிகள் கேள்விக்குறியாக உள்ளது. அதற்காகத்தான் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம். தேர்தலில் அதிமுகவிற்கு மட்டுமே வாக்கு கேட்பேன் எனக்கென்று தனி இலக்கு எதுவுமில்லை. அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பதே என் இலக்கு.
எடப்பாடி பழனிச்சாமி
பிரிந்து இருக்கும் அனைவரும் சேர்ந்து போட்டியிட்டால் மட்டுமே அதிமுக அட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை பாஜக ஏற்றாலும் மக்கள்தான் அதை தீர்மானிப்பார்கள். திமுகவின் நான்கரை ஆண்டு ஆட்சி காலத்தில் செயல்பாடு குறித்து நான் தினந்தோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறேன் திமுகவின் குறைகள் குறித்து தினம் தோறும் தெரிவித்து வருகிறேன். நான் கட்சியில் அம்மாவின் நம்பிக்கை உரியவராக இருந்தேன். 13 ஆண்டுகள் பொருளாளராக வகித்தேன். இன்றுவரை நான் அதிமுகவில் தொண்டராக தான் இருக்கிறேன். தலைவராக இல்லை.
விஜய் விமர்சனம்
தமிழகத்தில் திமுக தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே தான் போட்டி என சொல்கிறார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் முதல்வராக வருவோம் என்று தான் ஆசைப்படுவார்கள். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும். பெருந்தன்மையோடு பேச வேண்டும். விஜயின் கருத்துக்கள் அரசியல் ரீதியான இல்லை. அவர் பேசியதில் சில பேச்சுக்கள் ஏற்புடையது அல்ல. அரசியல் ரீதியாக இருக்கின்ற கருத்தாக இல்லை என்பதே என் கருத்து" என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications