சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் எடப்பாடியில் பழனிசாமியால் டெபாசிட் வாங்க முடியாது.. தேமுதிக நிர்வாகி

Google Oneindia Tamil News

சேலம்: தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் எடப்பாடியில் பழனிசாமியால் டெபாசிட் வாங்க முடியாது என சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாவட்ட கழக செயலாளர் A.R.இளங்கோவன் ஆவேசமாக பேசினார்.

Recommended Video

    சேலம்: தேமுதிக வேட்பாளர் போட்டியிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு டெபாசிட் கூட கிடைக்காது... தேமுதிக நிர்வாகி ஆவேசம்!

    சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இதற்கு காரணம் தேமுதிக. அந்த கட்சி கேட்ட அளவிற்கு தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டது. முதலில் 40 தொகுதிகளை கேட்ட தேமுதிக தலைமை, இப்போது 25 தொகுதிகள் கொடுத்தால் போதும் என்று இறங்கிவந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அதிமுகவோ 13 முதல் 15 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

    சுதீஷ் சந்திப்பு

    சுதீஷ் சந்திப்பு

    இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் அண்மையில் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அதிமுக அளிக்கும் தொகுதிகளை தேமுதிக ஏற்றுக்கொள்ளாது என்றே கூறப்பட்டது.

    தனித்து போட்டி

    தனித்து போட்டி

    இதனிடையே இன்று நடக்கும் கூட்டத்தில் கட்சி நிர்வாகிககளை சமாதானம் செய்து கூட்டணிக்கு தேமுதிக பச்சை கொடி காட்டுமா என்று அதிமுக எதிர்பார்த்தது- ஆனால் தேமுதிக நிர்வாகிகள் உடன்பாட்டை ஏற்காமல் ஏற்காமல் போனதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    தேமுதிககூட்டம்

    தேமுதிககூட்டம்

    இந்த சூழலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி முகவர்கள் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது., தேமுதிக ,மாவட்ட கழக செயலாளர் A.R.இளங்கோவன் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.,

    பழனிசாமி டெபாசிட்

    பழனிசாமி டெபாசிட்

    அப்போது அவர் பேசும் போது தேமுதிக வேட்பாளரை நிறுத்தினால் எடப்பாடியில் பழனிசாமியால் டெபாசிட் வாங்க முடியாது என்று ஆவேசமாக கூறினார். தேமுதிக இடம் பெறும் அணி தான் தமிழகத்தில் ஆட்சியைபிடிக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    English summary
    dmdk district secretary elangovan said tamil nadu chief minister edappadi Palanisamy will not be able to buy a deposit in Edappadi if he nominates a dmdk candidate:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X