இரக்கமே இல்லையா? கால்பந்தில் தோற்ற ஆத்திரம்.. பள்ளி மாணவர்களை ஷூ காலால் நெஞ்சில் உதைத்த ஆசிரியர்
சேலம்: சேலம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் தோற்றனர். இதனால் கோபமடைந்த அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களின் நெஞ்சில் ஷூ காலால் எட்டி உதைத்து தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளை சொல்லி திட்டிய வீடியோ வெளியாகி மனதை பதற வைத்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கால்பந்து அணி உள்ளது. சிறப்பாக விளையாடும் மாணவர்களை உள்ளடக்கி இந்த கால்பந்து அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியின் கால்பந்து அணி பள்ளிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை தலைமையில் மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் குளத்தூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை கடும் கோபம் அடைந்தார். மைதானத்திலேயே கால்பந்து அணியில் விளையாடும் மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து பிற மாணவர்கள் முன்னிலையில் வைத்து தாக்கினார்.
ஷூ காலில் அவர் மாணவர்களின் வயிறு மற்றும் நெஞ்சுப்பகுதியில் எட்டி உதைத்தார். இதில் மாணவர்கள் தரையில் அமர்ந்த நிலையில் கீழே விழுந்தனர். அதுமட்டுமின்றி தலைமுடியை பிடித்தில் மாணவர்களின் கன்னத்தில் அறைந்தார். மேலும் தகாத வார்த்தைகள் பேசி திட்டி வன்மத்தை கக்கினார்.
பிற மாணவர்கள் முன்னிலையில் தங்களுக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை நினைத்து மாணவர்கள் கண்கலங்கியபடி அமர்ந்து இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மாணவர்களை தொடர்ந்து திட்டி ஷூ காலால் எட்டி உதைத்தார். இதனை அங்கிருந்த மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கடும் கோபமடைந்துள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ‛‛போட்டியில் வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் ஏற்க வேண்டும். தோல்வி என்றால் வெற்றிக்கு பயிற்சி வழங்க வேண்டும். அதைவிட்டு விட்டு இப்படி மாணவர்களை தாக்குவது ஏற்கவே முடியாது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications