பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவால் திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது.. பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில், "பாரத அன்னை வாழ்க.. என்று தமிழில் பேசி பேச்சை தொடங்கிய பிரதமர் மோடி, எனக்கும் பாஜகவுக்கும், என்டிஏக்கும் தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது என்று பேசினார்.

லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

PM Modi to address BJP meeting in Salem Gajjalnaickenpatti today

அந்த வகையில் இன்று சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பாஜகவின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று 1 மணியளவில் கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடி பாரத் மாதா கி ஜே.. பாரத் மாதா கி ஜே.. பாரத அன்னை வாழ்க.. என்று தமிழில் பேசி பேச்சை தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது:- பாரத அன்னை வாழ்க.. என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்..

திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது: தமிழகத்தில் பாஜகவும் எனக்கும் கிடைக்கும் வரவேற்பை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. பாஜகவுக்கும் என்டிஏ கூட்டணி கட்சிக்கும் கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே போய்விட்டது. தமிழ்நாடு மக்கள் ஒரு முடிவு செய்துவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதி விழுகின்ற ஓட்டு எல்லாம் பாஜகவுக்கு தான்.. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான்..

தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். தமிழக மக்களின் ஆதரவால் இந்த முறை பாஜக கூட்டணி 400 ஐ தாண்டும். 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கோட்டை மாரியம்மன் மண்ணிற்கு வந்திருப்பது பெருமையளிக்கிறது. ராமதாஸ், அன்புமணியின் அனுபவம் பாஜகவிற்கு உதவியாக இருக்கும். பேசினார்.

மீண்டும் தமிழில் பேசிய மோடி: அப்போது பிரதமர் மோடி மீண்டும் தமிழில், "400க்கும் மேல.. நவீன உள் கட்டமைப்பிற்கு நானூறை தாண்டை வேண்டும்... பாரதம் தன்னிறைவு பெற நானூறுக்கும் மேல் பெற வேண்டும்.. விவசாயிகள் பயனடைய நானூறுக்கும் மேல் பெற வேண்டும்... எனவே இம்முறை வேண்டும் 400க்கு மேல..." என்று பேசினார்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு: ஏற்கனவே திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோவையில் நடந்த பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்றார். சாலையின் இருபுறமு முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு கோவையில் தங்கினார்.

இதைத்தொடர்ந்து இன்று கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு காலை 11.40 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு மதியம் 1 மணியளவில் வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து திறந்த வெளி வாகனத்தில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தடைந்தார்.

அன்புமணியை வரவேற்ற மோடி: அப்போது பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியும் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது பிரதமர் மோடிக்கு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், நினைவுப்பரிசு அளித்தனர். இதேபோல் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்தார். அப்போது பிரதமர் மோடி அன்புமணி ராமதாசை கை குலுக்கு வரவேற்றார்.

ஒரே மேடையில் கூட்டணி தலைவர்கள்: இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் எல் முருகன், ஜிகே மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதேபோல் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சரத்குமார், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் சேலம் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி வானில் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+