ஜெயக்குமார் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு
சேலம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது 49 ஆவது வார்டுக்குள்பட்ட தண்டையார்பேட்டையில் ஒரு வாக்குச் சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக ஒரு தகவல் வெளியானது.

இதை தடுத்து நிறுத்திய அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை பிடித்து அரைநிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து நரேஷின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் மார்ச் 7ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
அவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கோரி நேற்றைய தினம் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், ரோட்டை மறித்தல், கொரோனா நோய் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, சுந்தர்ராஜன், சித்ரா, ஜெய்சங்கர், நல்லதம்பி உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications