பெயில் ஆக்கிருவேன்.. நள்ளிரவில் ஆபாச மெசோஜ்! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! தொக்காய் சிக்கிய விஜி!
சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் தனியார் பள்ளியில் பள்ளி முதல்வர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு பிறகு பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்தனர்
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியராக மேட்டூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

மாணவிகளிடம் சில்மிஷம்
இரவு நேரங்களில் மாணவிகளுக்கு செல்போனிலும்,பகலில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளிடம் பல்வேறுவிதமான சில்மிஷங்களை செய்து வருவதாகவும்,இதை தெரிந்து கொண்ட சகமாணவர்கள் பள்ளியின் முதல்வரிடம் நேரில் சென்று, தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது எழுந்த பிரச்சனையை அடுத்து, பள்ளியின் நிர்வாகத்தால் தாரமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேரில் விசாரணை
இதையடுத்து இப்பள்ளியில் காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர்களிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இத்தகவலை கேட்டு, இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர்.

பெரும் பரபரப்பு
மேலும், ஒருசில மாணவிகளின் உறவினர்கள், பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரை தாக்க முயன்றனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.இதில், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது.

அதிரடி கைது
மேலும், பள்ளி ஊழியர்களை ஜாதி பெயரைச் சொல்லி அவர் அழைத்து வந்ததும் தெரியவந்தது. இதனிடையே, பள்ளியில் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்திருப்பதை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர், தலைமை ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்த போலீசார், அவரை விசாரணைக்காக ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications