Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவேக் மரணத்தில் அரசியல் செய்வது கேவலமான செயல்.. கொந்தளிக்கும் பாஜக இளைஞரணி செயலாளர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: தோல்வி பயத்திலேயே வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பில்லை என திமுக பொய் பரப்பி வருவதாக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    விவேக் மரணத்தில் அரசியல் செய்வது கேவலமான செயல்.. கொந்தளிக்கும் பாஜக இளைஞரணி செயலாளர் - வீடியோ

    மேலும், விவேக்கின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது மிகவும் கேவலமான செயல் என்றும் அவரது மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் களரம்பட்டி பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    அமைச்சரவையில் பாஜக

    அமைச்சரவையில் பாஜக

    இதனை அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அவர், தமிழக அமைச்சரவையில் பாஜக உறுப்பினர்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    உதவி மையம்

    உதவி மையம்

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் புரளியை நீக்க பாஜக சார்பில் வரும் திங்கட்கிழமை முதல் கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் உதவி மையம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாவட்டம் வாரியாக படுக்கை வசதி, தடுப்பூசி இருப்பு குறித்து பொது மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    கேவலமான செயல்

    கேவலமான செயல்

    மேலும், தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தி, விவேக்கின் மரணத்தை வைத்து சிலர் அரசியல் செய்வது மிகவும் கேவலமான செயல் என்றும் அவரது மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது என்றார்.

    10 தொகுதிகள்

    10 தொகுதிகள்

    தமிழகத்தில் அதிமுக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும், 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள பாஜக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் நிச்சயம் இடம்பெறுவோம் என்றார்.

    மதரீதியாக பார்க்கிறார்கள்

    மதரீதியாக பார்க்கிறார்கள்

    தமிழகத்தில் நடைபெறும் கொலைகளை கூட ஜாதி ரீதியாக மத ரீதியாக பிரித்துப் பார்க்கும் கட்சியாக திமுக உள்ளதாக சாடிய அவர் இந்த நிலை மாற வேண்டும் தமிழகத்தில் அனைத்து உயிர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.

    தோல்வி பயம்

    தோல்வி பயம்

    துணை ராணுவத்தினர் மற்றும் சிசிடிவி கண்காணிப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், தோல்வி பயத்திலேயே திமுகவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொய் பரப்பி வருவதாக தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+