கண்ணே தெரியல.. ஒரே புகை.. ஓடும் பஸ்ஸில் திடீர் தீ.. வெடித்து சிதறிய கண்ணாடிகள்.. சேலத்தில் பரபரப்பு
ஓடும் பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
சேலம்: ஓடிக் கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்துவிட்டது.. பஸ் கண்ணாடிகள் வெடித்து சிதறிவிட்டன.. எனினும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. கரும்புகை சூழ்ந்து கொண்டு, அந்த பகுதியே கும்மிருட்டாக தென்பட்டது பெரும் பரபரப்பை தந்துவிட்டது!
சேலம் அருகே இளம்பிள்ளையில் இருந்து தனியார் பஸ் ஒன்று சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பைபாஸ் அருகே வரும்போது, திடீரென பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது.. பஸ் கண்ணாடிகள் நொறுங்கி சிதறின.

பஸ் டிரைவர்
ஓடிக் கொண்டிருக்கும்போதே பஸ் எரிந்ததும், கண்ணாடி நொறுங்கி சிதறியதும் கண்டு பயணிகள் அலறி கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் டிரைவர் சுதாரித்து கொண்டார்.. உடனடியாக பஸ்ஸை தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருக்கக்கூடிய அணுகுசாலையில் ஓரங்கட்டினார்... பயணிகள் எல்லோரையும் சீக்கிரமாக கீழே இறங்குமாறு சொன்னார்... இதையடுத்து அனைவரும் பஸ்ஸைவிட்டு வேகவேகமாக வெளியேறினர்.

கதறினர்
நல்லவேளை, அதுவரை சிறிய அளவில் துவங்கி எரிந்த தீ, பயணிகள் இறங்கிய உடனேயே மளமளவென பஸ் முழுவதும் பற்றிக் கொண்டு எரிந்தது.. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை, சூரமங்கலம் தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எலும்புக்கூடு
ஆனாலும் பஸ் மொத்தமாக எரிந்து கருகி எலும்புகூடாகி விட்டது.. அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து கொண்டது.. இதனால் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எந்த வாகனமும் ஓட்ட முடியவில்லை.. டிராபிக் ஜாம் ஆனது.. கண்ணே தெரியவில்லை... பின்னர் கரும்புகை குறைய தொடங்கிய பிறகே, போலீசார் நெரிசலை சீர் செய்ய முடிந்தது.

பரபரப்பு
பஸ்ஸில் இருந்த பேட்டரிக்கும் டீசல் டேங்கருக்கும் நடுவே உள்ள ஒயர் உராய்ந்துள்ளது.. பஸ் பேட்டரியில் இருந்து மின்கசிவு வந்ததால்தான் இந்த தீ விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.. ஆனால் பயணிகள் நீண்ட நேரம் பீதியிலேயே இருந்தனர்.. நடுரோட்டில் ஓடுகிற பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துவிட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications