Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 "கருப்பு ஆடுகள்".. மசாஜ், விபச்சாரம்.. நிர்வாண கோலத்தில் சூட்கேஸில் பெண்.. சேலம் போலீஸ் அதிரடி

சேலம் பெண் கொலை தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் நிர்வாண கோலத்தில் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸில் சடலத்தை அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், அது தொடர்பாக 4 போலீசார் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15-ம்தேதி சேலத்தில் ஒரு கொடூர கொலை நடந்தது.. சேலம் குமாரசாமிப்பட்டியில் சண்முகா அபார்ட்மென்ட் உள்ளது.. இது நடேசன் என்ற அதிமுக பிரமுகருக்கு சொந்தமான அபார்ட்மென்ட்

இந்த அபார்ட்மென்ட்டில் தேஜ்மண்டல் என்ற பெங்களூரை சேர்ந்த பெண் குடும்பத்துடன் வாடகைக்கு தங்கியிருந்தார்.. 27 வயதாகிறது.. இவர் ஒரு மாற்று திறனாளியும்கூட..

காதலன் பெயர் பிரதாப்.. இந்த அபார்ட்மென்ட்டுக்கு குடிவந்து ஒரு வருடமாகிறதாம்.. பிரதாப் சென்னையில் பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது.

துர்நாற்றம்

துர்நாற்றம்

ஒருநாள் ஹவுஸ் ஓனருக்கு பிரதாப் போன் செய்துள்ளார்.. அதில், தான் சென்னையில் வேலை விஷயமாக இருப்பதாகவும், தேஜலுக்கு போன் செய்தால், அவர் எடுக்கவே இல்லை, என்ன ஆச்சு என்று தெரியவில்லை என்று பதற்றத்துடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ஹவுஸ் ஓனர் நடேசனும், தேஜ்மண்டல் வீட்டுக்கு சென்றார்.. ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

தாழ்ப்பாள்

தாழ்ப்பாள்

இதுகுறித்து உடனடியாக நடேசன், சேலம் மாநகர போலீசுக்கு தகவல் அளிக்கவும் அவர்களும் கதவின் தாழ்ப்பாளை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது, வீட்டின் பரண் மீது ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்தது.. சூட்கேசை திறந்து பார்த்தபோது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் தேஜலின் சடலம் இருந்தது.

 பியூட்டி பார்லர்

பியூட்டி பார்லர்

இந்த வீட்டிற்கு குடிவருவதற்கு முன்பே, குமாரசாமிப்பட்டி பகுதியில் தேஜல் குடியிருந்ததையும், மசாஜ் சென்டர்கள், பியூட்டி பார்லர்களை நடத்தி, அதன்மூலம் பாலியல் தொழிலை அவர் செய்து வந்ததாகவும் போலீசார் கண்டறிந்தனர்.. சேலம் மாநகரில் தேஜ் அழகு நிலையம் என்ற பெயரில் பேர்லண்ஸ், சங்கர் நகர் உள்ளிட்ட 3 இடங்களில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்திருக்கிறார். பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் தேஜ் மண்டல் மீது விபச்சாரம் நடத்தியதாக கேஸ் பதிவாகி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

கொலை

கொலை

ஆனால், தேஜலை யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை... இதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டது.. அப்போதுதான் 3 இளம்பெண் மீது சந்தேகம் வலுத்தது.. இவர்கள் 3 பேருமே பெங்களூரை சேர்ந்தவர்கள்.. தேஜல் வீட்டருகே குடியிருந்தவர்கள்.. கொலை சம்பவத்தை அரங்கேற்றியதே இந்த 3 பேர் தான் என்பதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெரியவந்தது. 3 பேருமே தலைமறைவாகி இருந்தனர்.. ஒருவேளை இவர்களுக்குள் ஏதாவது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருக்குமோ அல்லது விபச்சார வழக்கில் ஏதாவது தகராறு இவர்களுக்குள் ஏற்பட்டிருக்குமோ என்ற கோணத்தில் 3 பேரையும் தேடும் பணி ஆரம்பமானது.

சிக்னல்

சிக்னல்

அவர்களுடைய செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்தபோது, கொலையாளிகள் 3 பெண்களும் வங்கதேச நாட்டுக்கு தப்பி சென்றது தெரிந்தது... இதனிடையே, தேஜலின் செல்போனையும் ஆராய்ந்தனர்.. அந்த போனில் 4 போலீசார் சிக்கினர்.. அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அந்த 4 போலீசாரும் தேஜலுடன் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்தது.. ஆனால், அது என்ன மாதிரியான தொடர்பு என்ற அடுத்தக்கட்ட விசாரணையை கையில் எடுத்தனர்.

ஸ்பா

ஸ்பா

அதாவது, தேஜல் சேலம் மாநகரில் ஸ்பா என்ற பெயரில் நிறைய இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளாராம்.. ஒருமுறை அஸ்தம்பட்டி பகுதியில் இருந்த ஸ்பா சென்டர்களை போலீஸார் ரெய்டு நடத்த சென்றுள்ளனர்.. ஆனால், தேஜலிடம் காசு வாங்கி கொண்டு, எந்தவித நடவடிக்கையும் அவர் மீது எடுக்காமல் விட்டுவிட்டனராம். இந்த 4 போலீசாருக்கும், ஆயிரக்கணக்கான பணத்தை தேஜல் லஞ்சமாக தந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

லிஸ்ட்

லிஸ்ட்

இதையடுத்து, தேஜலுடன் தொடர்பில் இருந்ததோடு, சட்டவிரோத செயலுக்கு துணை போனதாக அஸ்தம்பட்டியில் அப்போது பணியில் இருந்த எஸ்ஐ ஆனந்தகுமார், எஸ்எஸ்ஐ சேகர், கலைச்செல்வன் மற்றும் ஏட்டு மணிகண்டன் ஆகிய 4 பேரையும் சேலம் மாநகர கமிஷனர் நஜ்முல்கோடா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில்தான், சேலம் மாவட்டத்திலுள்ள போலீஸார் எந்தெந்த விஷயங்களுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்று அம்மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் ஒரு லிஸ்ட்டை பகிரங்கமாக வெளியிட்டு கண்டித்திருந்தார்..

லிஸ்ட்

லிஸ்ட்

அதற்குள் இப்படி ஒரு சம்பவம் வெளிவரவும் சேலம் காவல்துறையே மிரண்டுவிட்டது.. எனினும் எந்தவித தயவு தாட்சண்யமும் பார்க்காமல் துறைரீதியாக உடனடியாக எடுத்த இந்த நடவடிக்கை மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. அதேசமயம், கடந்த ஒருமாத காலமாகவே சேலம் போலீசாருக்கு சவாலாக இருந்த இந்த கொலை வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+