Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படியே ஒரு நொடி.. ஆடிய கால்கள்.. மயங்கிய ராமதாஸ்.. விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் பள்ளப்பட்டியில் நேற்று மாலை அந்தச் சம்பவம் நடந்தபோது ஒட்டுமொத்த அரசியல் களமுமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது. 'கேஸ் சிலிண்டர்' சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஆவேசமாகப் பேசி முடித்த மருத்துவர் ராமதாஸ், மேடையை விட்டு இறங்கியபோது மயங்கி விழுந்தார்.

86 வயது. ரத்த அழுத்தக் குறைவு, கோடை வெயில், அலைச்சல் என அத்தனையும் சேர்ந்து அவரைச் சாய்த்திருக்கிறது.

Ramadoss tamil nadu assembly elections 2026 tvk

ஆனால், மருத்துவமனையில் கண் விழித்த சில நிமிடங்களிலேயே அவர் கேட்ட முதல் கேள்வி, "அடுத்த மீட்டிங் போகலாமா?" என்பதுதான். இதுதான் ரத்தமும் சதையுமான அரசியல்!

களமே கோயில்... கடமையே தெய்வம்!

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு பெரும் 'தகிப்பு' நிலையில் இருக்கிறது. ஒரு பக்கம் 70 வயதைக் கடந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காலில் கடந்த சில மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்த வலியையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராகப் பறக்கிறார். இன்னொரு பக்கம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெயில் கொடுமையால் முகம் கறுத்துப் போனாலும், ஏற்கனவே சில உடல் பிரச்சனைகள் காரணம் நீண்ட நாள் சிகிச்சை எடுத்தாலும்.. வேனில் நின்றபடி இடைவிடாது 'மைக்' பிடித்து முழங்குகிறார்.

இவர்களுக்குப் பின்னால் இருப்பது வெறும் பதவி ஆசை மட்டுமல்ல, பல தசாப்தங்களாகக் களத்தில் ஊறிய 'அரசியல் டி.என்.ஏ'. ஒரு தலைவன் என்பவன் தொண்டனைச் சந்திக்க வேண்டும், வியர்வை சிந்தி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என்பதை இவர்கள் பாலபாடமாகப் பயின்றவர்கள். மக்களிடம் செல் என்று அண்ணா சொன்னதை கேட்டு வந்தவர்கள் இவர்கள்!

விஜய்... இது 'கட்-அவுட்' அரசியலா, 'க்ளோஸ்-அப்' அரசியலா?

ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கதையோ வேறு. சினிமாவைத் தாண்டி அரசியலுக்கு வந்த அவர், களத்தில் நிற்க வேண்டிய இந்த முக்கியமான நேரத்தில் 'மிஸ்ஸிங்' லிஸ்டில் இருக்கிறார்.

ரத்து செய்யப்படும் கூட்டங்கள்: ஒரு பக்கம் சீனியர்கள் மயங்கி விழும் வரை உழைக்கிறார்கள். ஆனால் விஜய்யோ, "வெயில் அதிகம்", "பாதுகாப்பு போதாது" எனச் சொல்லி அடுத்தடுத்து கூட்டங்களை ரத்து செய்து கொண்டிருக்கிறார்.

ஏப்ரல் மாத 'மிஸ்ஸிங்' லிஸ்ட்!

மார்ச் 30 & ஏப்ரல் 6 வில்லிவாக்கம் & தி.நகர்

வில்லிவாக்கம் பகுதியில் பிரம்மாண்டமாகத் தயாரான மேடைகள் ஏமாற்றத்தையே சந்தித்தன. சென்னை தி.நகரிலும் ஏப்ரல் 6 அன்று இதே நிலைதான்.

ஏப்ரல் 9 & 11 குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி & திட்டக்குடி

கடலூர் மாவட்டத்தின் இந்த முக்கிய இடங்களில் இரண்டு முறை (9 மற்றும் 11-ம் தேதிகள்) அனுமதி வாங்கப்பட்டு, கடைசி நேரத்தில் ப்ரோக்ராம் கேன்சல் ஆனது.

ஏப்ரல் 12 & 13 கன்னியாகுமரி & கும்மிடிப்பூண்டி

தென்கோடி கன்னியாகுமரி முதல் வடக்கே கும்மிடிப்பூண்டி வரை திட்டமிடப்பட்ட பயணங்களுக்கும் இதே கதிதான்!

கிரவுண்ட் டூ ஸ்கிரீன்: அரசியலில் 'வாக்கு' என்பது தியேட்டர் டிக்கெட் கிடையாது. ஆடியோ லான்ச் மேடையில் குட்டி ஸ்டோரி சொல்வதற்கும், வாடிவாசலில் நின்று வியர்வையோடு மக்களிடம் பேசுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

நிஜம் எதிர் நிழல்: ஸ்டாலினும், இ.பி.எஸ்-ஸும், ராமதாஸும் தங்களின் உடல்நிலையைத் தாண்டி களத்தில் நிற்பது விஜய்க்கு ஒரு பாடம். மக்கள் தலைவன் என்பவன் டிஜிட்டல் திரையில் தோன்றும் பிம்பமாக மட்டும் இருந்தால் போதாது; அவர்களின் கைகளைத் தொடும் தூரத்தில் இருக்க வேண்டும்.

கடைசிச் சோற்றுப் பருக்கை வரை...

ராமதாஸ் நேற்று சரிந்து விழுந்த அந்த நொடி, இளைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி. "அரசியல் என்பது ஏசி அறையில் அமர்ந்து செய்யும் கார்ப்பரேட் வேலை அல்ல; அது வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, மக்களோடும் மண்ணோடும் நடத்தும் போர்."

80 வயதைத் தாண்டிய தலைவர்களே ஓயாமல் ஓடும்போது, 50-களின் தொடக்கத்தில் இருக்கும் விஜய், இன்னமும் 'ஷூட்டிங் பிரேக்' எடுப்பது போல அரசியலைக் கையாள்வது தொண்டர்களிடையே சோர்வையே ஏற்படுத்தும்.

விஜய் கவனிக்க வேண்டியது ஒன்றுதான்: திரையில் நீங்கள் 'தளபதி'யாக இருக்கலாம். ஆனால், நிஜ அரசியல் களத்தில் நீங்கள் 'சிப்பாய்' ஆகக் கூட இன்னமும் அணிவகுப்பில் சேரவில்லை. சீனியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் விஜய்... அரசியல் என்பது தியேட்டர் அல்ல, தகிக்கும் தார்ச்சாலை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+