அதிரடி மாற்றம்.. ரெடியாகும் சேலம்! மூடியே கிடந்த ஏர்போர்ட்டிற்கு விடிவு காலம்.. இவ்வளவு சீக்கிரமா
சேலம்: சேலம் மக்களுக்கு மிகப் பெரிய நல்ல செய்தி வந்துள்ளது. இதன் மூலம் சேலத்தின் கனெக்டிவிட்டி அதிகரிக்கும் நிலையில், இது நகரின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.
இந்தியாவில் இப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்து என்றால் அது விமான போக்குவரத்து தான். மத்திய அரசும் கூட விமான போக்குவரத்திற்குத் தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

முதற்கட்ட நகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் விமானச் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமானச் சேவை என்பது ஒரு நகரில் வளர்ச்சியை நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
உதான் திட்டம்: அதன்படி மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முதல் விமானச் சேவையாகச் சேலம் மற்றும் சென்னை இடையே விமான சேவை இயக்கப்பட்டது. இந்த ரூட்டில் டிமாண்ட் அதிகமாகவே இருந்தது. இயக்கப்பட்ட காலத்தில் பெரும்பாலான நேரத்தில் விமானம் 80% வரை நிறைந்தே இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் இந்த ரூட்டில் விமான சேவை இயக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ரூட்டில் சேவை நிறுத்தப்பட்டது. உதான் திட்டத்தின் கீழ் நீட்டிப்பு காலம் முடிவதற்கு முன்பே விமானங்கள் நிறுத்தப்பட்டது. சேலம் விமான நிலையத்தில் இயக்கப்படும் ஒரே விமானமாக இது இருந்த நிலையில், அதுவும் நிறுத்தப்பட்டால் சேலத்தில் விமான சேவையே இல்லாத நிலை உருவானது.
சேலம் ஏர்போர்ட்: நீண்ட ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த சேலம் விமான நிலையம், உதான் திட்டத்தின் கீழ் தான் செயல்பாட்டிற்கு வந்தது. இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் விமானச் சேவையைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த உதான் திட்டமாகும். கடந்த 2018 முதல் 3 ஆண்டுகள் உதான் திட்டத்தின் கீழ் இங்கே விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 70 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் தினசரி காலை சேலம் மற்றும் சென்னைக்கு இடையே இயக்கப்பட்டது. இதில் பெரும்பாலான காலங்களில் 80% மேல் இருக்கைகள் நிரம்பியே இருந்தது. இப்படி உதான் திட்டத்தில் வெற்றிகரமாக இருந்த விமானச் சேவை நிறுத்தப்பட்டது சேலம் மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே செப்டம்பர் இறுதிக்குள் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானச் சேவை தொடங்கப்படும் என திமுக எம்பி எஸ் ஆர் பார்த்திபன் தெரிவித்தார்.
எந்த ஊர்களுக்கு விமான சேவை: இண்டிகோ மற்றும் அலையன்ஸ் ஏர் ஆகியவை சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சிக்கு விமானங்களை இயக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சேலம் ஏர்போர்ட்டில் விமானச் சேவை எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், பலரும் சேலத்தில் விமானச் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கிடையே இப்போது பல மாதங்களுக்குப் பிறகு சேலத்தில் மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது.
சேலத்தில் அதிக டிமாண்ட் இருப்பதால், மத்திய அரசு சேலத்தில் இருந்து விமானங்களை இயக்க இரண்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்று திமுக எம்பி பார்த்திபன் தெரிவித்தார்,
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications