வளைவில் திரும்பிய போது விபரீதம்.. மோதிய பேருந்துகள்.. சேலத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சேலம்: சேலம் ஓமலூர் அருகே தனியார் ஆம்னி சொகுசு பேருந்தும், ஆன்மீக சுற்றுலா சென்ற மினி பேருந்தும் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து தனியார் சொகுசு பேருந்து கேரளாவை நோக்கி இன்று அதிகாலை சேலம் அருகே சென்று கொண்டிருந்தது. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா மினி பேருந்து ( NPL 9Y 339) சேலம் அருகே வந்து கொண்டிருந்தது.

சேலம் ஒமலூர் அருகே சின்னநடுப்பட்டி பிரிவு சாலையில் நள்ளிரவு சுமார் 1.00 மணி அளவில் நேபாளத்தை சேர்ந்த சுற்றுலா மினி பேருந்தின் ஓட்டுனர், சின்னநடுப்பட்டி காளியம்மன் கோவில் மண்டபத்தில் தங்குவதற்காக பேருந்தை எதிர் சாலைக்கு யூடர்ன் செய்தார். அப்போது பெங்களூரிலிருந்து கேரளா செல்வதற்காக வந்த தனியார் ஆம்னி சொகுசு பேருந்து சுற்றுலா பேருந்தின் நடுப்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில் மினி பேருந்து நொருங்கியது. இந்த விபத்தில் மினிபேருந்தில் பயணம் செய்த பீர் பகதூர் ராய், டீக்காரம், புல் ஹரி செளத்திரி, கோபால் தமஸ், போதினி, விஷ்ணு தாங்கல் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபகணிக்கர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஸ்குமார் மற்றும் ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Recommended Video
விபத்து ஏற்பட்டதில் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பின்பு சீர் செய்யப்பட்டது. விபத்து தொடர்பாக ஓமலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications