சேலம் பெண் என்ஜீனியர் கொலை ஏன்? சொந்தக்காரர்கள் கேட்ட அந்த ஒரு கேள்வி.. கணவர் பரபரப்பு வாக்குமூலம்
சேலம்: சேலத்தில் பெண் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தை இல்லாத ஆத்திரத்தில் அடித்துக் கொன்றதாக அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகள் தனுஸ்ரீ (26). என்ஜீனியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவன், மனைவி இருவரும் சேலம் ரெட்டிப்பட்டியில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் 11 ஆம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம்
இதில் ஆத்திரமடைந்த கீர்த்திராஜ், மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதையடுத்து சூரமங்கலம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து கீர்த்திராஜை கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன் என்று கீர்த்திராஜ் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

3 ஆண்டுகள்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் கீர்த்திராஜ். தனுஸ்ரீ தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா என கீர்த்தியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளனர்.

கோபம்
இதனால் கீர்த்தியின் மனைவி தனுஸ்ரீக்கு கோபம் வந்தது. இது தொடர்பாகவும் கணவன்- மனைவியிடையே சண்டை ஏற்பட்டது. சம்பவ தினத்தன்று மீண்டும் குழந்தையின்மை குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் கிரிக்கெட் மட்டையால் தனுஸ்ரீயின் தலையில் அடித்துள்ளார்.

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை
இதில் மண்டை உடைந்து அவருக்கு ரத்தம் கொட்டியது. அப்போது கீர்த்திராஜிடம் தனுஸ்ரீ தன்னை காப்பாற்றுமாறு கேட்டுள்ளார். ஆனால் கீர்த்திராஜனோ தனுஸ்ரீயின் கழுத்தை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துவிட்டார். இதையடுத்து தனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது சடலத்தின் அருகே நீலிக் கண்ணீரும் வடித்துள்ளார். ஆனால் தனுஸ்ரீயின் பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது என போலீஸார் தெரிவித்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications