8 வழி சாலை வழக்கு தீர்ப்பால் சிறிதளவு மகிழ்ச்சி- முழுமையாக ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
சேலம்: சென்னை-சேலம் 8 வழி சாலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் சிறிதளவு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை-சேலம் 8 வழி சாலை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பில் சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பித் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பி ஒப்படைக்க உத்தரவு
மேலும் புதிய அறிவிக்கை வெளியிட்டு, சுற்றுச் சூழல் அனுமதி பெற்று நிலம் கையகப்படுத்தி 8 வழி சாலை திட்டத்தை தொடங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பின் அம்சத்துக்கு சேலம் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பட்டாசு வெடித்தனர்.

முழுமையாக ரத்து செய்திடுக
இத்தீர்ப்பு தொடர்பாக சேலம் ராமலிங்கபுரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சிறிதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 8 வழி சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

விவசாயிகள் துயரம்
எனவே தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொள்ளாமல் இந்த சாலையை மீண்டும் அமைக்க முற்பட்டால் விவசாயிகளின் மிகப்பெரிய போராட்டத்தால் இந்த ஆட்சியே மாற்றப்படும்.

தேர்தல் அறிக்கையில்..
எதிர்வரும் தேர்தலில் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றி பெற முடியாது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications