துபாய்ல இதுக்கு பேரு குப்ப லாரி.. 'ஸ்டாலின் பஸ்’ முன்னாடி ரீல்ஸ்! லிட்டில் பிரின்ஸஸை தேடும் போலீஸ்.!
சேலம்: சேலம் அருகே அரசு பேருந்தை குப்பை லாரியுடன் ஒப்பிட்டு ரீல்ஸ் பதிவிட்ட இளம் பெண்கள் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரீல்ஸ் மோகத்தில் அரசு பேருந்தை இழிவுபடுத்தி வீடியோ பதிவிட்ட இளம் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், போலீஸ் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன.
குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது. மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும், ஓட்டை உடைசலுடன் இயக்கப்படும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருச்சியில் இருந்து கேகே நகருக்கு சென்ற அரசு பேருந்தில் வளைவில் திரும்பிய போது நடத்துனர் பேருந்தில் இருந்து இருக்கையுடன் வெளியே விழுந்தார்.
மேலும், அடிக்கடி நடுவழியில் பழுதாகி நிற்கும் பேருந்துகளை பொதுமக்கள் தள்ளிக் கொண்டே சென்ற வீடியோக்களும் வெளியாகி கடும் விமர்சனத்தை பெற்றது. இப்படி அரசு பேருந்துகள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் ஆகியவை பெரிய வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும். மகளிர் இலவச பயண பேருந்துகளுக்கு பிங்க் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருக்கும்.
பொது மக்கள் அதனை ஸ்டாலின் பஸ் எனக் கூறுவதாக திமுகவினர் பெருமை பேசுவார்கள். இந்த நிலையில் அரசு பேருந்து முன்பாக நின்று கொண்டு, அதனை குப்பை லாரியுடன் ஒப்பிட்டு ரீல்ஸ் போட்ட இரண்டு பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சேலத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த ஆத்தூர் செல்லும் அரசு பேருந்து முன்பு இரண்டு இளம் பெண்கள் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பொதுமக்கள் பயணிக்கும் அரசு பேருந்தை குப்பை லாரியுடன் ஒப்பிட்டு ரீல்ஸ் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரீல்ஸ் மோகத்தில் அரசு பேருந்தை இழிவுபடுத்தி வீடியோ பதிவிட்ட இளம் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வாழப்பாடி போலிசார், அந்த பெண்கள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications