அரசு விடுதியில் மது கொடுத்து 2 மாணவிகள் பாலியல் வன்கொடுமை.. ஆண் நண்பருடன் பெண் தூய்மை பணியாளர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: அரசு மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்த 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக விடுதி பெண் துப்புரவு பணியாளர், நண்பருடன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில், 14 வயதுடைய 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவியரான இருவர், தங்கி படிக்கின்றனர். இவர்கள், வாழப்பாடி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், விடுதி துாய்மை பணியாளர் வாழப்பாடியைச் சேர்ந்த ராதிகா, இரவில் விடுதிக்கு வெளியே அழைத்து, வாழப்பாடியைச் சேர்ந்த ரகுபதி, என்பவருடன் பழக வைத்து, பாலியல் துன்புறுத்தல் செய்தார் எனத் தெரிவித்திருந்தனர்.

Salem sexual abuse crime

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் ராதிகாவும், அதே பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற கார் டிரைவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ரகுபதி, ராதிகாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 2 பேரை ரகுபதிக்கு அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது. அதன்பிறகு அடிக்கடி ரகுபதி ராதிகாவின் செல்போனில் மாணவிகளை தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 8 ஆம் தேதி இரவு மாணவிகள் விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவிற்கு பீர் பாட்டில் மற்றும் சில்லி சிக்கன் ஆகியவற்றை ரகுபதி கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இரவு நேரத்தில் ராதிகா அந்த 2 பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த ரகுபதி தனது பைக்கில் 2 மாணவிகளையும் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 2 மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பற்றி யாரிடமும் மாணவிகள் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 15 ஆம்தேதி சுதந்திர தின விடுமுறையில் மாணவிகள் அவர்களது வீட்டுக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் பெற்றோரிடம் ரகுபதி நடந்து கொண்ட விவரம் குறித்து தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு இனி செல்வதில்லை எனக் கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணை முடிவில் மாணவிகள் விடுதி தூய்மை பணியாளர் ராதிகாவை போக்சோ சட்டத்தில் நேற்று மதியம் கைது செய்தனர்.
மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக ரகுபதி மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், "ராதிகா, ரகுபதி நெருக்கமாக பழகியுள்ளனர். இரவில், ராதிகா, ரகுபதியை விடுதிக்கு அடிக்கடி வரவழைத்து, இருவரும், மது அருந்தி நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது இரு மாணவியரையும் அழைத்த ராதிகா, அவர்களுக்கும் மது ஊற்றி கொடுத்துள்ளார். ரகுபதி, அந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சில மாதங்களாக இது தொடர்ந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்புரவு பணியாளர் ராதிகாவும், அவரது நண்பர் ரகுபதியும் வேறு மாணவிகள் யாருக்கும் மது கொடுத்துள்ளனரா? வேறு மாணவிகள் யாரும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+