சேலத்தை கிறங்கடித்த "16 வயதினிலே".. இதே வேலையாய் அலைந்த மைனர்.. திருப்பூரில் அந்த பொண்ணு பாவம்
சேலம்: சேலம் மாவட்டமே கதிகலங்கியிருக்கிறது.. 17 வயது சிறுவனை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.. அதுவும் போக்சோவில்...!!
கடந்த மாதம் கோவையில் ஒரு சம்பவம் நடந்தது.. பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த 13 வயது சிறுமி, கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு பக்கத்திலேயே, பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவனும் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

சிறுமி: சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள்.. அதனால், காலையிலேயே வேலைக்கு கிளம்பிவிடுவார்கள்.. சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பாராம். அப்போது, பக்கத்து வீட்டு பீகார் சிறுவன், சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்... அதுமட்டுமல்ல, இதை பற்றி யார்கிட்டயாவது சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்..
இதற்குநடுவில், சிறுமிக்கு திடீர்னு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிடவும், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதுதான் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
பீகார் சிறுவன்: பிறகுதான், 12 வயது சிறுவன் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது தெரிய வந்தது. ஆத்திரமடைந்த பெற்றோர், கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் சிறுவனின் மீது புகார் தரவும், சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் கொண்டுபோய் அடைத்தார்கள். 12 வயது சிறுவன் இப்படி ஒரு காரியத்தை செய்தது, தமிழக மக்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. இதோ 17 வயது சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்திருக்கிறார்கள்.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 10ம் வகுப்பு படித்து விட்டு எலக்ட்ரிக் வேலைக்கு சென்று வருகிறார்.. இவரும், இதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் 2 வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள்.
திருப்பூர்: இந்த விஷயம் சிறுமியின் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது.. அதனால், திருப்பூரில் உள்ள சொந்தக்காரர் வீட்டில், மகளை தங்க வைத்ததுடன், அங்கேயே ஒரு பள்ளிலும் சேர்த்துவிட்டார். இப்போது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார்..
திடீரென தன்னுடைய காதலியை காணாமல் சிறுவன், அதிர்ந்துபோனான்.. காதலியை தன்னிடம் இருந்து பிரித்தது, அவரது அம்மாவின் வேலையாகத்தான் என்பதையும் அறிந்து கொண்டான்.. எனவே, காதலியின் சொந்தக்காரர்கள் யார் யார் என்பதை அறிந்து, ஒவ்வொரு ஊர்களிலும் தேடியலைந்துள்ளார். இறுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருப்பூரில் காதலி தங்கி படித்து வருவதை சிறுவன் கண்டுபிடித்துவிட்டான்.
வீடியோக்கள்: அதனால், உடனே திருப்பூருக்கு சென்றான் சிறுவன்.. அந்த பள்ளியை தேடிகண்டுபிடித்து, சிறுமியிடம் மீண்டும் காதலை வளர்த்துள்ளான்... கடந்த 4 நாட்களுக்கு முன்பு, மாணவியை தனியாக அழைத்து சென்று, உறவு கொண்டிருக்கிறான்.. 2 பேருமே அப்போது நெருக்கமாக இருந்தபோது, சில வீடியோக்களை சிறுவன் செல்போனில் எடுத்துள்ளான்...
இந்நிலையில், சேலத்தில் உள்ள மாணவியின் அம்மாவின் செல்போனுக்கு, ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில், சிறுவனுடன் மகள் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் அம்மா. உடனே இதுகுறித்து அந்த சிறுவனின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது, சிறுவனின் பெற்றோரும், உறவினர்களும் சேர்ந்து, அந்தம்மாவை அடித்து விரட்டியிருக்கிறார்கள்..
கைது: இதனால் மனம் நொந்துபோன அந்தம்மா, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 17 வயது சிறுவனை கைது செய்து, சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.
பெண் குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பெற்றோர்கள் தினம் தினம், வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்தால்.. இப்படியெல்லாம் நடப்பதை என்னவென்று சொல்வது? இதற்கெல்லாம் யார் காரணம்? பெற்றோர்களா? சோஷியல் மீடியாவா? சூழ்நிலையா? அல்லது எல்லாருமா? தெரியவில்லை.. இந்த கலியுகத்தில், இன்னும் என்னவெல்லாம் நாம பார்க்க வேண்டி இருக்கோ?!












Click it and Unblock the Notifications