சேலம் தொகுதி: யாருடைய கோட்டை? மோதிப் பார்க்கும் அதிமுக vs திமுக vs பாமக vs நாம் தமிழர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சட்டசபை தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து கோலோச்சும் சேலம் லோக்சபா தொகுதியை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் திமுக வும் சேலம் கோட்டை என்பதை நிரூபிக்க அதிமுகவும் தீவிரமாக உள்ளன. பாமகவும் தமது வலிமையை காட்ட முயற்சிக்கிறது.

சேலம் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிக:
ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.
சேலம் லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் 6 முறை, அதிமுக 4 முறை வென்றுள்ளன. திமுகவும் இத்தொகுதியில் 4 முறை வென்றுள்ளது. 1984,89,1991-ல் காங்கிரஸின் ரங்கராஜன் குமாரமங்கலம் தொடர்ந்து போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற தொகுதி. 1998-ல் சுயேட்சையாக போட்டியிட்டு வாழப்பாடி ராமமூர்த்தி சேலத்தில் வென்றார்.

Salem Lok Sabha constituency Candidate List Assembly Constituencies Voters Count and Election Results

சேலம் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 16,48,911; ஆண்கள்-8,23,336; பெண்கள்- 8,25,354; 3-ம் பாலினத்தவர் 221.

2009-ம் ஆண்டு சேலம் தொகுதி தேர்தல் முடிவுகள்:

செம்மலை(அதிமுக) 3,80,460
கேவி தங்கபாலு (காங்கிரஸ்) 3,33,969
அழகாபுரம் மோகன்ராஜ் (தேமுதிக) 1,20,325

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

பன்னீர்செல்வம் (அதிமுக) 5,56,546
செ. உமாராணி(திமுக) 2,88,936
சுதிர்(தேமுதிக) 2,01,265

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:

எஸ். ஆர். பார்த்திபன்(திமுக) 6,06,302
சரவணன் (அதிமுக) 4,59,376
பிரபு மணிகண்டன்(மக்கள் நீதி மய்யம்) 58,662
செல்வம்(அமமுக) 52,332
ராஜா(நாம் தமிழர் கட்சி) 33,890

2024 -ம் ஆண்டு தேர்தல் களத்தில்..

செல்வகணபதி( திமுக)
விக்னேஷ் (அதிமுக)
அண்ணாதுரை (பாமக)
மனோஜ்குமார் (நாம் தமிழர் கட்சி)

சேலம் தொகுதி நிலவரம் என்ன? வன்னியர், கொங்கு வேளாளர் சமூகத்தினர் கணிசமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. வன்னியர்கள் 38%; தலித்துகள் 18% ; கொங்கு வேளாள கவுண்டர் 7% உள்ளனர். நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் பிரதானம். மரவள்ளிக்கிழங்கு சாகுபடியும் முக்கியமானதாக இருக்கிறது. மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இருந்தாலும் மேட்டூர் அணை நீரால் அதிகம் பயனடையாத மாவட்டம். அதேநேரத்தில் குடிநீருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம்தான். மாம்பழ நகரமாக போற்றப்படும் சேலத்தில் அடிப்படை வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் காலந்தோறும் தீர்க்கப்படாத அடிப்படை சிக்கல்களும் இருக்கின்றன. சேலம் மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருக்கிறது. சேலத்தையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் ரயில் போக்குவரத்தும் எதிர்பார்ப்புக்குரியது. சேலத்தைக் கைப்பற்றுவதை திமுக, அதிமுக, பாமக முனைப்பாக கொண்டுள்ளன. சட்டசபை தேர்தல்களில் சேலம் மாவட்டத்தில் அதிமுகதான் கோலோச்சியது. இந்த முறை சேலம் தங்களது கோட்டை என நிரூபிக்கவே மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான செல்வகணபதி களமிறக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அதிமுகவும் புதுமுகம் விக்னேஷை களமிறக்கினாலும் களப் பணிகளில் ஜரூர் காட்டுகிறது. பாமகவும் எப்படியாவது சேலத்தில் ஜெயிக்க போராடுகிறது. இந்த மும்முர மோதல்களுடன் நாம் தமிழர் கட்சியும் இணைந்து களம் காண்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+