ஊரெல்லாம் காதலிகள்.. 6 வருஷத்தில் 50 பேரிடம்.. பண மோசடி வேற.. கண்ணு தெரியாட்டியும்.. பதறவைத்த டேவிட்
பணமோசடியில் சேலம் டேவிட் கைதானார்
சேலம்: டேவிட்-க்கு கண் பார்வை இல்லை.. ஆனால் நிறைய மனைவிகள்.. ஊரெல்லாம் கள்ளக்காதலிகள்.. 6 வருஷத்தில் 50 பேரிடம்.. 50 லட்சம் மோசடி செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா!!
சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் அஷ்ரப் அலி.. இவருக்கு வயது 24.. என்ஜினீயரிங் படித்தும் வேலை கிடைக்கவிலை.. அதனால் ஒரு இன்டர்வியூ-ட்க்கு பெங்களூர் சென்றுவிட்டு பஸ்ஸில் வந்தார்.. அநந்த சமயத்தில்தான் டேவிட் அறிமுகமானார்.. டேவிட்டுக்கு வயது 38.. கண் பார்வை இல்லை.
பஸ்ஸில் ஏற்பட்ட பழக்கத்தினால் அஷ்ரப் செல்போன் நம்பரை டேவிட் வாங்கி கொண்டார்.. அடிக்கடி பேசியும் வந்தார்.. ஆஸ்திரேலியாவில் உள்ள ரெனால்ட் நிசான் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக அஷ்ரப்புக்கு சொன்னார் டேவிட்!

தவணை
மேலும் அதற்கு பணம் செலவாகும் என்று சொன்னதால், போன வருடம் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை 3 தவணையாக அஷ்ரப் அலி டேவிட்டிடம் தந்தார்.. ஆனால் டேவிட் வேலை வாங்கியே தரவில்லை.. பலமுறை கேட்டு பார்த்தும் வேலையும் இல்லை, பணமும் கிடைக்கவில்லை.

இரக்கம்
இரக்கம் இதனால் மனம் நொந்த அஷ்ரப் சூரமங்கலம் போலீசில் புகார் தரவும் டேவிட் கைதானார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் பல பகீர் தகவர்கள் வெளியாயின. "கண் பார்வை இல்லை.. இருந்தாலும் பஸ்களில் நிறைய பயணம் போவேன்.. பயணிகளிடம் நைசா பேச்சு தருவேன்.. இரக்கம் கொண்டு, எனக்கு அவர்களும் உதவி செய்வார்கள்.

பணம்
பிறகு மெதுவாக செல்போன் நம்பரை வாங்கி கொள்வேன்.. அவர்கள் வீட்டுக்கு சென்று பாசமாக பேசுவேன்.. உயரதிகாரிகளிடம் பழக்கம் உள்ளது போல காட்டிக் கொள்வேன். வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டுவேன்.. அந்த வேலைக்கு ஆசைப்பட்டு நிறைய பேர் பணம் தருவார்கள்.. 6 வருஷத்தில், 50-க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை மோசடி செய்திருக்கிறேன்.

ஜாலி
இந்த மோசடி பணத்தில் நிறைய பெண்களை கல்யாணம் செய்தேன்.. சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த பெண்கள். இது தவிர சென்னை, பெங்களூரு, கரூர், நாமக்கல், ஈரோட்டில் 10-க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள் எனக்கு உள்ளனர்.. அவர்களிடம் பணத்தை கொடுத்து ஜாலியாக இருப்பேன்" என்றார்.

கள்ளக்காதலிகள்
இவ்வளவு விவரங்களையும் டேவிட் சொல்லியதை அடுத்து, போலீசார் சேலம் ஜெயிலில் அவரை அடைத்துள்ளனர்.. மேலும் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். மாற்று திறனாளி ஒருவர் பண மோசடி செய்ததுடன்.. ஏகப்பட்ட கல்யாணம்.. கள்ளக்காதலிகளுடன் வாழ்க்கையை அனுபவித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications