சேலத்தில் கறிக்கடை வியாபாரி வெட்டிக் கொலை.. கள்ளக்காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்
சேலம்: சேலம் ஆட்டையாம்பட்டியில் கள்ளக்காதல் காரணமாக கறிக்கடை வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுச்செல்வன். கறிகடை வியாபாரியான இவருக்கு பார்வதி என்ற மனைவியும், கருணாஸ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்களும் உள்ளார்கள். அறிவுசெல்வன் மனைவியுடனான தகராறு காரணமாக கடந்த 10 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அறிவு செல்வனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அறிவுசெல்வத்தை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த வந்த போலீசார் அறிவுசெல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சேலம் போலீசார், அறிவுசெல்வன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆத்திரம் காரணமாக இளம் பெண்ணின் உறவினர்கள் அவரை வெட்டி கொலை செய்து இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்த இந்த படுகொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications