Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் மணமகனிடம் ரகசியத்தை சொன்ன மணமகள்.. ஒரே பெண்ணை பலரும் மணமுடித்து.. வள்ளியின் திருவிளையாடல்

Subscribe to Oneindia Tamil

சேலம்: தொழில்நுட்பங்கள் பெருகி கொண்டிருக்கும் சூழலில், ஆன்லைன் மோசடிகளும் பெருகிவருகின்றன.. புதுபுது செயலிகளை பயன்படுத்தி, புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்கு நடுவில் தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் நகை பறிக்கும் செயல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.. இதனால் உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு, ஏமாந்து போகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.. இதில், அதிகரிக்கும் திருமண மோசடிகளுக்கு, ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை.. சேலத்தில் என்ன நடந்தது தெரியுமா?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திண்டமங்கலத்தானூர் பகுதியில் வசித்து வருபவர் அர்ஜுனன்... இவர் கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார்.

Salem marriage broker mettur

இவரது மூத்த மகன் பிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்ய, சமீபகாலமாகவே பெண் தேடி வந்துள்ளார்.. அப்போது ஜலகண்டாபுரம் அருகிலுள்ள செலவடை பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் அர்ஜூனனுக்கு அறிமுகமாகியிருக்கிறார்..

மகனுக்கு பெண் பார்ப்பதாக சொல்லவும், தனக்கு தெரிந்த பெண் புரோக்கர் மூலம் வரன் தேடலாம் என்று, அர்ஜூனனிடம் குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்... இதற்கு நடுவில், சங்ககிரி வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த மணி என்பவரையும் அர்ஜுனனுக்கு குமார் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

பெண் புரோக்கர் வள்ளி

இதையடுத்து, குமார், மணி இருவரும் சேர்ந்து, தங்களுக்கு தெரிந்த பெண் புரோக்கர் ஈரோட்டில் இருப்பதாக கூறி, அர்ஜூனனை அழைத்து சென்றுள்ளனர்.. விஜயமங்கலத்தில் நல்ல வரன் இருப்பதால், பிரகாஷையும் கையோடு அழைத்து சென்றுவிட்டால், பெண்ணை பார்த்து நிச்சயம் செய்துவிட்டு வரலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

உடனே அர்ஜூனனும், மகன் பிரகாஷை அழைத்துக் கொண்டு, குமார், மணி கூறிய திண்டல் முருகன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளனர்... அந்த கோயிலுக்கு பெண் புரோக்கர் வள்ளி என்பவர், பிரியதர்ஷினி என்ற இளம்பெண்ணை அழைத்து வந்துள்ளார்..

பிரியதர்ஷினியை பார்த்ததுமே பிரகாஷூக்கு பிடித்துப்போய்விட்டது.. பிறகு தங்களது வீட்டை நேரில் வந்து பார்க்கும்படி பிரகாஷ் தரப்பில் சொல்லவும், பிரியதர்ஷினி தரப்பினரும் ஜலகண்டாபுரத்திற்கு வந்து பிரகாஷ் வீட்டை பார்த்துள்ளனர்.

ரூ.1.80 லட்சம் புரோக்கர் கமிஷன்

இறுதியில் கடந்த 27ம் தேதி, ஜலகண்டாபுரம் நஞ்சம்பட்டி சித்தேஸ்வரர் கோயிலில் பிரகாஷ் - பிரியதர்ஷினிக்கு நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது.. இதையடுத்து, தங்களது புரோக்கர் கமிஷன் 1.80 லட்சம் ரூபாயை வாங்கி கொண்டு, மணி மற்றும் குமார் இருவரும் சென்று விட்டனர்.

ஆனால், திருமணம் முடிந்ததிலிருந்தே, மணமகன் பிரகாஷிடமும், அவரது குடும்பத்தினரிடம் மணப்பெண் பிரியதர்ஷினி சரிவர பேசாமல் இருந்துள்ளார்... இது பிரகாஷூக்கு கவலையை உண்டுபண்ணியது.. எனவே பிரிதர்ஷினியிடம் இதுகுறித்து பிரகாஷ் நேரடியாகவே கேட்டிருக்கிறார்.. அதற்கு பிரியதர்ஷினி, தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதாக சொன்னார்..

நொந்து போன அர்ஜூனன்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷூம், அவரது குடும்பத்தினரும், புரோக்கர் மணிக்கு போன் செய்துள்ளனர்.. ஆனால் புரோக்கர் அந்த செல்போனை எடுத்து பேசாமலேயே இருந்துள்ளார்..

தங்களிடம் பணத்தை வாங்கி கொண்டு, திருமணமான பெண்ணை வைத்து தங்களை ஏமாற்றிவிட்டார்களே என்று மனம் நொந்துபோன அர்ஜுனன், ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. இந்த புகாரின்பேரில், மணி, குமார், வள்ளி, சக்திவேல், செல்வி, மணப்பெண் பிரியதர்ஷினி உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், பெண் புரோக்கரான செல்வி, மணப்பெண் பிரியதர்ஷினி, இவர்களுக்கு உதவிய பிரியா ஆகியோரை 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்..

ஒரே பெண்ணை பலருக்கும் திருமணம்

பணத்திற்காக பிரகாஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக பிரியதர்ஷினி போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.. இந்த மோசடி கும்பல் பிரியதர்ஷினி உள்ளிட்ட வேறு சில பெண்களையும் வைத்து திருமண மோசடியில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.. அதிலும் பிரியதர்ஷினி போலவே, வேறொரு இளம்பெண்ணை, பலருக்கு திருமணம் செய்து வைத்து பண மோசடியை தொடர்ந்து நடத்தி வந்துள்ளதும் அம்பலமாகியிருக்கிறது.

தற்போது கைதான 3 பெண்கள் சேலம் ஜெயிலில் உள்ளனர்.. ஆனால், மணி, குமார், சக்திவேல், வள்ளி ஆகியோர் தலைமறைவாகி விட்டதால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+