கடும் எதிர்ப்பு.. கறுப்பு நிற ஆடை அணியக்கூடாது என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றது சேலம் பெரியார் பல்கலை!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவின்போது நாளை கறுப்பு உடை அணிந்து வரவேண்டாம் என்ற பல்கலைக்கழக பதிவாளரின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதனிடையே, இந்த நிகழ்ச்சியின் போது ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்கு திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதனம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்து வருகிறது. ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவின் காரணமாக சேலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் அறிவுறுத்தலின்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பினார்.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை இன்று அனுப்பியுள்ளார். அதில், "பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வர வேண்டும்.

மேலும், செல்போன்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். சேலம் மாவட்ட காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி இது கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கறுப்பு உடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில், கறுப்பு உடை அணிந்து வரக் கூடாது என்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றொரின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி, பட்டமளிப்பு விழாவில் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications