ஏற்கனவே வாய்க்கால் தகராறு.. இதில் இன்னொரு புது தகராறா.. சிக்கலில் சேலம் ஏட்டு!
மது அருந்திவிட்டு விஷம் அருந்தியதாக பொய் சொன்னார் ஏட்டு ஒருவர்.
சேலம்: போலீஸ் ஸ்டேஷனையே மிரள வைத்து எல்லோருக்கும் கிலி ஏற்படுத்தி விட்டார் ஒரு ஏட்டு!
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன். 40 வயதாகிறது. இவர் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக உள்ளார். கடந்த சில தினங்களாகவே வெள்ளையனுக்கு ஓவர் டியூட்டி போட்டு விட்டார்கள். அதனால் லீவு எடுக்காமல் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
இதில் 2 நாளுக்கு முன்னர் முதல்வர் வரப்போகிறார் என்பதால் பாதுகாப்பு பணிக்காக வெள்ளையனுக்கு டியூட்டி போட்டு விட்டார்கள். இதனால் வெள்ளையனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அதனால இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் சண்டைக்கு போய்விட்டார்.

தகராறு செய்தார்
"இப்படி தொடர்ந்து டியூட்டி போட்டா எப்படி?" என்று தகராறு செய்தார். இந்த தகராறு குறித்து மாவட்ட எஸ்.பி. ஆபீசுக்கு போன் பறந்தது. உடனே, இது சம்பந்தமாக விசாரித்து அறிக்கை அனுப்பும்படி எஸ்.பி. ஆபீசிலிருந்து சொல்லி விட்டார்கள். அதனால் வெள்ளையனை விசாரணைக்கு ஆஜராகும்படி இன்ஸ்பெக்டர் சொன்னார்.

பாதியிலேயே கிளம்பினார்
இதனால் நேற்று முன்தினம் காலை ஸ்டேஷனுக்கு வந்த வெள்ளையனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாதி விசாரணை போய்க் கொண்டிருந்தது. அப்போது வெள்ளையன் திடீரென எழுந்து பாதியிலேயே வெளியே கிளம்பி போய்விட்டார். காலையில் போன வெள்ளையன் சாயங்காலம் ஸ்டேஷனுக்கு வந்தார்.

108 ஆம்புலன்ஸ்
அப்போது அங்கிருந்தவர்களிடம் "நான் விஷம் குடித்துவிட்டேன்" என்று சொல்லிவிட்டு தரையில் படார் என விழுந்தார். இதை பார்த்து பதறிபோன மற்ற ஊழியர்கள், உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து, வெள்ளையனை அதில் ஏற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

மிரட்டல்தான்
அப்போது டாக்டர்கள் விரைந்து வந்து வெள்ளையனை செக் பண்ணினார்கள். அப்போதுதான் தெரிந்தது வெள்ளையன் குடித்தது விஷம் இல்லை.. அது சரக்கு என்று!! கொஞ்சம் நேரம் தெளிய வைத்து பின்னர் இதை பற்றி வெள்ளையனிடம் கேட்டதற்கு, விசாரணையில் அதிகாரிகளை மிரட்டதான் விஷம் குடித்ததாக சொன்னதாக கூறினார்.

அடுத்த சஸ்பெண்ட்
இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு வெள்ளையன் இப்படித்தான் உயர்அதிகாரிகளிடம் சண்டைக்கு போனாராம். அதனால் டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இப்பவும் அதிகாரி கிட்ட சண்டைக்கு போய் உள்ளார். அதனால, எப்படியும் வெள்ளையனுக்கு இன்னொரு சஸ்பெண்ட் ஆர்டர் ரெடி ஆயிடும் என்று சொல்கிறார்கள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications