Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்னைவிட அதிக சம்பளம் வாங்கிய மனைவி.. வீட்டில் விபரீத முடிவெடுத்த பேராசிரியர்.. சேலத்தில் சோகம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் பிரிவில் தற்காலிக உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஜெயபிரபாகரன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி தன்னைவிட அதிக சம்பளம் வாங்கியதால் பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவியை விட கணவன் அதிகம் சம்பாதித்தால் அதனை ஏற்கும் சிலர், கணவனை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் மன ரீதியாக ஏற்க மறுக்கிறார்கள். அப்படி ஒரவர் தான் ஜெயபிரபாகரன், இவர் தற்கொலை செய்து கொண்ட காரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

salem Professor committed suicide because his wife earned more than him

34 வயதாகும் ஜெயபிரபாகரன் என்பவர் சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் பிரிவில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சோபனாவுக்கும் 31 வயது ஆகிறது. இவரும் அதே கல்லூரியில் சிவில் பிரிவில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் திருச்சியில் ஒரு கல்லூரியில் படித்திருக்கிறார்கள். அப்போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. படித்த போதே கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகரன் (4), ரேவன் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஜெயபிரபாகரன் தனது பெற்றோர் மற்று குடும்பத்தினருடன் கல்லூரியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார். ஆடிப்பெருக்கு பண்டிகையை ஒட்டி ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சோபனா, குழந்தைகளுடன் சென்றுவிட்டார். அப்போது ஜெயபிரபாகரன் பிரபாகரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவருடன் அவரது பெற்றோரும் இருந்துள்ளனர்.

ஆடி பெருக்கு நாளான ஆகஸ்ட் 3ம் தேதி இரவு உதவி பேராசிரியர் ஜெயபிரபாகரன் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஜெயபிரபாகரன் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது ஜெயபிரபாகரன், தனது மனைவியின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சோபனா அதிக சம்பளம் வாங்கியதாகவும், அவரை விட ஜெயபிரபாகரன் குறைந்த சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தாராம். அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

இருந்தாலும் ஜெயபிரபாகரனின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதும் காரணம் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து அவரது மனைவி மற்றும் பெற்றோரிடம் விசாரித்து வருகிறார்கள். தன்னை விட மனைவி அதிக சம்பளம் வாங்கியதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த வகையிலும் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது.. எனவே தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். தற்கொலை மனநிலை வந்தால் உடனே தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அழைத்து ஆலோசனை பெறுங்கள் அப்படி ஆலோசனை பெற்றால் தற்கொலை மனநிலையில் இருந்து மீண்டுவிடலாம்.

தற்கொலை தடுப்பு எண்கள்

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours)

மாநில தற்கொலை தடுப் உதவி எண்: 104 (24 hours)

ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+