பிணத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. அதிர வைத்த "சைக்கோ கில்லர்" கைது.. நிம்மதியில் சேலம்!!
சேலம்: சடலங்களின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. பணம் எடுக்கும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்... ரோட்டோரம் தூங்கி கொண்டிருப்பவர்களின் தலையில் கல்லைதூக்கி போட்டு கொன்று சேலம் மக்களை குலைநடுங்க செய்தவர்தான் இந்த நபர்!
சேலம் காசகரனூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வயசானவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தனர்.. இவர்கள் யாருமில்லாத ஆதரவற்றவர்கள்.. வீடு வாசல் இல்லாமல் ரோட்டோரம் தூங்குபவர்கள்.. இவர்களைதான் குறிவைத்து ஒரு நபர் கொன்று வந்தார்.
அடுத்தடுத்து 4 முதியவர்கள் இறந்தது அப்பகுதி மக்களை நடுக்கத்தில் ஆழ்த்திவிட்டது.. இதனால் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.. அந்த வீடியோவில், 3 மணியளவில் ஒருவர் தனியார் டயர் கடை வாசலில் தூங்கி கொண்டிருக்கிறார்.

சூரமங்கலம்
அப்போது ஒரு மர்ம நபர் அங்கு வருகிறார்.. முதியவரின் தலையில் ஒரு பெரிய கல்லை போட்டு கொலை செய்கிறார்.. இது சம்பந்தமாக சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும்வேளையில்தான், இன்னொரு நபர் கொல்லப்பட்டார். அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலும், அதே கொலைகாரன்.. அதேபோல் கல்லை தூக்கி.. முதியவரின் தலையில் போட்டு கொல்கிறான்.

க்ளு கிடைத்தது
அவர் இறந்த பிறகு அவரது சடலத்தை இப்படியும், அப்படியும் புரட்டி போட்டு.. பேன்ட், டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து செல்கிறார். இந்த நபரை பிடிக்க தனிப்படை அமைத்து சேலம் போலீசார் தீவிரம் காட்டினார்கள்.. சில தினங்களுக்கு முன்பு கூட இந்த கொலையாளியை பற்றி துப்பு கிடைத்திருப்பதாகவும், விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் போலீசார் சொன்னார்கள்.. அதன்படியே 3 பெரியவர்களை கொன்ற நபரை கைது செய்துவிட்டனர்.

முரண் தகவல்கள்
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. ஆனால், அந்த நபர் மாறி மாறி தகவல்களை சொல்லி போலீசாரை குழப்பிவிட்டு விட்டார்.. அந்த தகவல்கள் பாதி நம்பும்படியாகவும், மீதி குழப்புவதாகவும் இருந்ததால், சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளும் அந்த நபரின் தனி போட்டோவையும் பெங்களூரில் உள்ள தடயவியல் சோதனை மையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.. இப்போது அந்த ரெண்டும் ஒரே நபர்தான் என்று உறுதியாக தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.

ஆண்டிசாமி
பெயர் ஆண்டிசாமி.. திண்டுக்கல் மாவட்டம் சித்தேரியூரைச் சேர்ந்தவர்... கஞ்சா அடிப்பவர்.. கஞ்சா அடிமையும்கூட.. வீட்டில் இவரை அடித்து துரத்தி விட்டனர்.. அதனால் ஊர் ஊராக சுற்றி திரிந்தார்.. ஆனாலும் கஞ்சா அடிக்காமல் இருக்க முடியவில்லை.. அதனால்தான், நைட் நேரங்களில் பிச்சை எடுக்கும் நபர்களை குறி வைத்து.. அவர்கள் தூங்கும்போது கொன்று, அந்த பணத்தை கொள்ளையடித்து கஞ்சா புகைத்து வந்திருக்கிறார் என தெரியவந்தது.

கஞ்சா
வயதானவர்கள் தூங்கும்போது நைசாக பணத்தை எடுக்கதான் முயன்றுள்ளார்.. ஆனால் அவர்கள் விழித்து கொண்டு சத்தம் போட்டதால்தான் கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்றுவிட்டாராம்.. 4 கொலைகளை செய்த இந்த ஆண்டிச்சாமியின் வயது வெறும் 19 தான்!!
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications