சேலம் ஹைவேஸில் பரபரப்பு.. சூட்கேஸில் ஆடையின்றி முடங்கிய பெண்.. பெங்களூரில் இப்படி கொடூர மனைவி? ச்சே
சேலம்: சங்ககிரி ஹைவேஸ் பகுதியில், ஆளில்லாத பாலத்துக்கு அடியில் கார் ஒன்று வந்து சென்றதை சிசிடிவி கேமராவில் போலீசார் கண்டனர்.. இதையடுத்து நடந்த விசாரணையில்தான், இந்த பகீர் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது வைகுந்தம் என்ற பகுதி.. இங்குள்ள சர்வீஸ் சாலையோர பாலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது.

இதனால், அந்த பகுதி மக்கள் உடனடியாக விஏஓ ஜெயகுமார், மற்றும் சங்ககிரி போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. இதையடுத்து அதிகாரிகளும் உடனடியாக விரைந்து வந்து, பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த சூட்கேஸை கண்டெடுத்தனர்..
அழுகிய சடலம்: அந்த சூட்கேஸில் பாலிதீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி பெண்ணின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் காணப்பட்டது.. இந்த சடலத்தை சங்ககிரி கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதுடன், அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்... அப்போது, அந்த பகுதிக்கு கார் ஒன்று வந்து சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது..
இதனால் அந்த காரை அடையாளம் கண்டனர்.. அதன் உரிமையாளர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருவது தெரியவந்தது. எனவே, அந்த நபரை பற்றி தீவிரமாக விசாரித்து கொண்டிருந்தபோதே, அவரது மனைவி திடீரென தலைமறைவானார்... இதனால் அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியது..

தேடுதல் வேட்டை: பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்குபிறகு, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தம்பதி இருவரும் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனால், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தம்பதியை சுற்றிவளைத்து கைது செய்து, தங்கள் விசாரணையையும் அவர்களிடம் ஆரம்பித்தனர்.
தம்பதி இருவரும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவர்கள்.. கணவன் பெயர் அபினேஷ் சாகு (41), மனைவி பெயர் அஸ்வின்பட்டில் (37).. இருவருமே காதல் திருமணம் செய்தவர்கள்.. இருவருமே பெங்களூரு அருகே பானத்தூர் பங்கனபள்ளியில் தங்கி ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருபவர்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
ஆசிரமம்: அபினேஷ்ஷின் அப்பா, கார்த்திக்சந்திரசாகு ஆதரவற்றோர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார்.. கடந்த வருடம் இந்த ஆசிரமத்திற்கு சென்ற அபினேஷ், சுமைனா என்ற 15 வயது சிறுமியை, தன்னுடைய வீட்டு வேலைக்காக அழைத்து வந்திருக்கிறார்..
சம்பவத்தன்று அபினேஷ் மனைவி அஸ்வின்பட்டி சிறுமியிடம் குடிக்க வெந்நீர் கேட்டுள்ளார்.. சிறுமியும் வெந்நீர் எடுத்த வந்தபோது கை தவறி , அஸ்வின்பட்டி மீது விழுந்துவிட்டது. இதனால் கொந்தளித்துபோன அஸ்வின்பட்டி, பூரிக்கட்டையாலேயே சிறுமியை சரமாரியாக அடித்து தாக்கியிருக்கிறார்.. இதில் சிறுமி வலி தாங்க முடியாமல் கதறி, சோர்வடைந்தாள்.
அதிர்ச்சி: அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்த அபினேஷ், சிறுமியை சரமாரியாக தாக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. மனைவியையும் கோபமா திட்டியிருக்கிறார்.. பிறகு சிறுமியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார்.
ஆனால், மறுநாளும் சிறுமியிடம் வீட்டு வேலை செய்யும்படி அஸ்வின்பட்டில் சொல்லியிருக்கிறார்.. நடக்கவே தெம்பில்லாத நிலையில், அந்த சிறுமியும் வேலை செய்ய முயன்றுள்ளார்.. ஆனால், கீழே விழுந்த சிறுமி இறந்துவிட்டார். இதனால் பயந்துபோன அஸ்வின்பட்டில், போலீசில் சிக்கி கொள்வோம், ஜெயிலுக்கு சென்றுவிடுவோமே என்று பயந்து சடலத்தை மறைக்க முயன்றுள்ளார்..
வாக்குமூலம்: இதை கணவரிடம் சொல்லி அவரையும் சம்மதிக்க வைத்துள்ளார். பிறகுதான், உடலை நிர்வாணமாக்கி, சடலத்துடன் சூட்கேசை அடைத்து காரில் சேலம் கொண்டு வந்து வீசிவிட்டு போனார்களாம். இவ்வளவும் வாக்குமூலமாக தெரியவந்துள்ளதையடுத்து, தம்பதியிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆதாரங்கள்: இதுகுறித்து போலீசார் தரப்பில் சொன்னதாவது: "வைகுந்தம் சுங்கச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து திரும்பிய கார்களின் பதிவெண்கள், அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்கள், சடலம் கண்டெடுத்த இடத்தில் கிடைத்த வெளிநாட்டு வங்கி பெயர், அச்சிட்ட பிளாஸ்டிக் பை - இதெல்லாம்தான் எங்களுக்கு க்ளூவாக கிடைத்தன.. இவைகளை வைத்துதான், விசாரணையை நடத்தினோம்.
அதில், 114 கார்கள், அந்த சாலையில் குறிப்பிட்ட 2 நாட்களில் மட்டும் வந்து சென்றது தெரியவந்தது. அதேநேரம் அங்கு பயன்படுத்திய செல்போன் எண்கள் குறித்தும் விசாரித்தோம்.
கிடைத்த க்ளூ: அனைவரும் சேலத்துக்கு வந்து சென்ற காரணத்தை சரியாக சொன்னார்கள்.. அதற்கான ஆதாரத்தையும் தெரிவித்தனர்.. ஆனால், SUV 300 மாடல் கொண்ட, கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட காரை ஓட்டி வந்த அபினேஷ் மட்டும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.. அதற்கு பிறகு அவரது செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.. இதுதான் எங்களுக்கு இந்த வழக்கில் திருப்பத்தை தந்தது. எனவே அவரது தொடர்பு கொள்ள முயற்சித்தபோதுதான், அவரது மனைவியும் மாயமானது தெரியவந்தது" என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications