கணவன் அருகே அம்மிக்கல்லுடன் வந்த மனைவி.. செம ஷாக்! சேலம் வையாபுரி உடையார் தெருவில் ஓடிய மக்கள்
சேலம்: சேலம் அம்மாபேட்டை பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான கொலை சம்பவம் அந்த ஊரையே உலுக்கி எடுத்துள்ளது.. தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் சித்ரவதை செய்து வந்த கணவரின் அக்கிரமத்தை அந்த மனைவியல் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. இது தொடர்பாக நடந்த சம்பவத்தில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..
சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம்.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் டேப் கட்டில் பின்னும் தொழில் செய்து வந்தார்.. அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான பத்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்..

சேலம் கணவர்
இந்தத் தம்பதியினர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வையாபுரி உடையார் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்தனர்.. மகிழ்ச்சியாக தொடங்கிய இவர்களது வாழ்க்கையில், தங்கத்திற்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் பெரிய இடியாக வந்து விழுந்தது..
தங்கம் மது போதைக்கு அடிமையானதுடன், தனது மனைவியின் நடத்தையின் மீது தேவையில்லாமல் சந்தேகப்படத் தொடங்கினார்.. போதையில் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பத்மாவிடம் தகராறு செய்வதும், அவரை அடித்துத் துன்புறுத்துவதும் தங்கத்தின் வாடிக்கையாகிப் போனது..
மனைவி மீது சந்தேகம்
இந்த சூழலில் தான் கடந்த 16-ம் தேதி நஞ்சம்பட்டியில் வசித்து வந்த தங்கத்தின் தாயார் காலமானார்.. அம்மா மறைந்த துக்கம் விசாரிக்கவும், காரியங்களை செய்யவும் பத்மா அடிக்கடி நஞ்சம்பட்டிக்கு சென்று வந்துள்ளார்.. ஆனால், தனது மனைவி உறவினர்களைப் பார்க்க செல்வதைக் கூட தங்கம் தவறாக சந்தேகப்பட்டுள்ளார்..
நேற்று இரவும் தங்கம் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போது பத்மாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.. சொந்தக்காரர்களைப் பார்க்கச் செல்வதை வைத்து மிகவும் கேவலமாகப் பேசியதுடன், பத்மாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.. இதில் பத்மாவுக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, பெரும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்..
தினமும் இப்படி போதையில் வந்து சந்தேகப்படுவதையும், தன்னை அடிப்பதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் மனவேதனையில் அழுதுகொண்டே இருந்துள்ளார்..
அம்மிக்கல் மனைவி
நள்ளிரவு நேரத்தில் குழந்தைகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.. தங்கம் மது போதையில் கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.. அந்த நேரத்தில் ஆத்திரமும் வேதனையும் தலைக்கேறிய பத்மா, வீட்டில் இருந்த கனமான குழவி கல்லை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த தங்கத்தின் தலையில் ஓங்கிப் போட்டார்.. இதில் தங்கத்தின் தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்..
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.. போலீசார் விரைந்து வந்து தங்கத்தின் உடலைக் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தொடர்ந்து பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்..
அந்த விசாரணையில், தங்கம் தனது தம்பி மற்றும் உறவினர்களுடன் சேர்த்துத் தன்னைத் தவறாகப் பேசி தினமும் சித்ரவதை செய்ததாகவும், அந்த டார்ச்சரைத் தாங்க முடியாமல் தான் ஆத்திரத்தில் கொன்றுவிட்டதாகவும் பத்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.. ஒரு சந்தேகத்தால் அழகான குடும்பம் இன்று சிதறிப் போயுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications