சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் காலமானார்.. பாலியல் தொடர்பான டிவி நிகழ்ச்சியால் பிரபலமானவர்!
சேலம்: பிரபல சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 78.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை, குறிப்பிட்ட சில டிவி சேனல்களை எப்போது ஆன் செய்தாலும் அதில் சிவராஜ் பேசிக்கொண்டே இருப்பார்.
பாலியல் மற்றும் நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் அவரது முக்கியமான பேசுபொருளாக இருந்தது.

90ஸ் கிட்ஸ்
எனவேதான், 90ஸ் கிட்ஸ் மத்தியில் சேலம் சிவராஜ் பெயர் மிகவும் பிரபலம். அவர் தனது பேச்சின் போது, "தாத்தா சொல்கிறேன் கேளுங்கள்.." என்று அடிக்கடி கூறுவார். எனவே, சேலம் சிவராஜ் தாத்தா என்று செல்லமாக அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.

சுய இன்பம் பற்றி பேச்சு
டிவி நிகழ்ச்சிகளில் இவர் பெரும்பாலும் ஆண்கள் சுய இன்ப பழக்கத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வார். சில நேரங்களில் ஒரு கட்டத்திற்கு மேலே போய் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். "கை கூப்பி உங்களை நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.. இந்த பழக்கத்தை விட்டுவிடுங்கள்" என்று கூட சொல்வார். சொந்த தாத்தா மாதிரி கேட்கிறேன். இது வருங்காலத்தில் திருமண வாழ்க்கை உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சொல்வார்.

எதிர் கருத்து
ஒருகட்டத்தில் மருத்துவர்களின் ஒரு பிரிவினர் அவரது இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தனர். சுய இன்பம் செய்வதன் காரணமாக திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்பது தவறான கருத்து. அது இயற்கையான பழக்கம். அளவோடு இருந்தால் போதுமானது என்று எதிர்தரப்பு ஒரு கருத்தை முன்வைத்தது.

ஏழு தலைமுறை பாரம்பரியம்
ஆகமொத்தம், சேலம் சிவராஜ் பேச்சின் காரணமாக உடலியல் சார்ந்த ஒரு ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் சிவராஜ் பங்களிப்பு இளம் தலைமுறையினருக்கு மிகவும் முக்கியமானது. சிவராஜ் மட்டுமே சித்த வைத்தியர் கிடையாது. சுமார் ஏழு தலைமுறைகளாக அவரது குடும்பம் சித்த வைத்தியத்தில் ஈடுபட்டுவருகிறது.

சிவராஜ் காலமானார்
இந்த நிலையில்தான் சமீபத்தில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இன்று அதிகாலை மருத்துவமனையில் அவர் காலமானார். இதையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டத்தில் உள்ள பூர்வீக இடமான சிவதாபுரத்திலுள்ளள அகஸ்தியர் மாளிகை என்ற வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை சிவராஜ் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications