Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலரிடம் கடன் வாங்கியும் மகனை குணப்படுத்த முடியவில்லை.. சேலத்தில் குடும்பமே விபரீத முடிவு

Subscribe to Oneindia Tamil

சேலம்: பலரிடம் கடன் வாங்கிய சாப்ட்வேர் இன்ஜினியர், வாய் பேச முடியாத மகனுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்படி செய்தும் மகன் குணமாகவில்லை. கடனில் பாதியை கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால், தந்தை, மனைவி, மகனை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் மட்டும் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

சேலம் கோரிமேட்டை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 38 வயதாகும் திலக் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா சமயத்தில் வெளிநாட்டில் இருந்து சேலம் திரும்பிய அவர் தனது பெற்றோருடன் வீட்டில் இருந்த படியே வேலை செய்து வந்தார். திலக்கிற்கு 33 வயதில் மகேஸ்வரி என்ற மனைவியும், 6 வயதில் சாய் கிரிஷ்சாந்த் என்ற மகனும் இருந்தனர்.

salem software engineer killed his father, wife and son and committed suicide

குழந்தை சாய் கிரிஷ்சாந்த் வாய் பேசமுடியாத நிலை இருந்தது. இதையடுத்து திலக்கும் மகேஸ்வரியும் அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் கடன் வாங்கி செலவழித்து மகனை காப்பாற்ற முயற்சித்தனர்.

மகனுக்காக திலக் பல இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். இருப்பினும் மகனை குணப்படுத்த முடியவில்லை. மேலும் சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. தன்னுடைய ஒரே மகனுக்கு இப்படி ஆகி வருகிறதே என்று திலக் மற்றும் மகேஸ்வரி வேதனையில் இருந்துள்ளனர். அதிக கடன் வாங்கி செலவழித்தும் காப்பாற்ற முடியாத நிலையில், கடனையும் கட்ட முடியாத நெருக்கடியான நிலைக்கு திலக் தள்ளப்பட்டாராம்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு திலக், மகேஸ்வரி ஆகியோர் குடும்பத்துடன் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். வீட்டின் மேல் மாடியில் திலக், மகேஸ்வரி, மகன் சாய் கிரிஷ்சாந்த் தூங்கி உள்ளனர். கீழ் தளத்தில் திலக்கின் தந்தை சிவராமன், அவருடைய மனைவி வசந்தா ஆகியோரும் தூங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு அரைமயக்க நிலையில் வசந்தா வீட்டில் இருந்து வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தனர். ஒரு அறையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் சிவராமன் இறந்து கிடந்தார்.

4 பேர் மரணம்: இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மேல்மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு மகேஸ்வரி, சாய் கிறிஷ்சாந்த் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், திலக் தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர். ஒரே வீட்டில் சிவராமன் அவரது மகன் திலக், மகேஸ்வரி, குழந்தை சாய் கிரிஷ்சாந்த் ஆகிய 4 பேரும் இறந்து கிடந்தனர்.

போலீசுக்கு தகவல்: இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்து வந்தனர்.உயிருக்கு போராடிய வசந்தாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் இறந்து போன 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்: இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் குடும்பத்தையே கொன்று சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரின் சோதனையில் உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் திலக், "நான் பலரிடம் கடன் வாங்கி இருக்கிறேன் அதில் பாதி பணத்தை திருப்பி செலுத்திவிட்டேன். மீதி கடனை என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் வாங்கி மகனுக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இந்த முடிவினை எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வாட்ஸ் அப் மெசேஜ்: இதனிடையே தற்கொலை செய்வதற்கு முன் பெங்களூருவில் உள்ள அண்ணன் சந்துருவுக்கு, திலக் 'வாட்ஸ்-அப்'பில் ஒரு தகவல் அனுப்பி உள்ளார். அதில் கடன் தொல்லையாலும், வாய் பேசமுடியாத மகனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாலும் மிகுந்த மனஉளைச்சல் அடைந்துள்ளோம். இதனால் குடும்பத்துடன் சாகப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு உடனடியாக திலக்கின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கு போன் செய்து தனது தம்பியின் குடும்பத்தினரை பார்க்குமாறு கூறியுள்ளார்.

தாய் தப்பியது எப்படி: நேற்று முன்தினம் 10 மணியளவில் திலக்கின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அனைவரும் வீட்டில் பேசிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதன்பிறகு தான் திலக், தந்தை, தாய், மனைவி, மகனுக்கு விஷமாத்திரை கொடுத்துவிட்டு, தானும் தூக்குப்போட்டு இறந்துள்ளார். வசந்தா மட்டும் ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிட்டதால் உயிர் தப்பி உள்ளார். அதேநேரம் மற்றவர்கள் நிறைய மாத்திரைகள் சாப்பிட்டதால் பிழைக்க முடியவில்லை.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல.. தற்கொலை எண்ணத்தை தயவு செய்து விதைக்காதீர்கள். தற்கொலை எண்ணம் வந்தால் உடனே தமிழக அரசின் 104 என்ற எண்ணிற்கு அழைத்து மனநல ஆலோசனை பெறுங்கள். தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுங்கள். தற்கொலை தடுப்பு எண்: 104

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+