Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ சேலம்.. இனி சல்லுனு பறக்கலாம்.. டிட்டோ பெங்களூரூ.. மீண்டும் 8 வழிச்சாலை.. வந்தாச்சு நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: முதல்வர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை சட்டம் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள, பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்டத்துக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவரும், இப்போதைய ஜார்கண்ட் மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலத்துக்கு வருகை தந்தார். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

Salem to Bangalore and Chennai Salem 8 lane road Project will revived soon, says Jharkhand Governor CP Radha krishanan

சேலம் சென்னை: "சேலம் மாநகரின் மகத்தான பாக்கியம் கோட்டை மாரியம்மனின் பலம்தான்... சேலத்தின் பாக்கியம் கோட்டை மாரியம்மன் அருள் தான் சேலம் மாநகரமாக உயர்ந்துள்ளது. காலத்தைக் கடந்து சேலம் வெற்றிகரமான நகரமாக மாநகரமாக உயர்ந்து நிற்கிறது. சேலம்- சென்னை எட்டு வழி சாலை மறுபடியும் வரும். அப்போது, சென்னைக்கு நிகராக, பெங்களூருக்கு நிகரானதாக சேலம் மாவட்டம் வளரும்.

சேலம் நகரம் சென்னைக்கு நிகராக, பெங்களூருக்கு நிகரானதாக மாற வேண்டுமென்று மாரியம்மனின் திருவடிகளை பணிந்து வேண்டுகிறேன்.. நல்லதே நடக்கும்..

ஆன்மீகம்:
ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். ஆன்மீகம் மட்டும்தான் பொது வாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடை மட்டத்தில் உள்ள மனிதனுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தும்.

உதயநிதிக்கு என்ன அரசியல் ஞானம் உள்ளது? சனாதானத்தை ஒழிப்பதற்கு உதயநிதிக்கு முன்பாக எத்தனையோ மகத்தான முகலாய மன்னர்கள் இருந்தார்கள். கூர்வாள் கொண்டு இந்துக்களை கொன்று குவித்திருக்கிறார்கள். அதில் எல்லாம் முடியாத சனாதனம் இந்து தர்மமும் ஒழிப்பும் உதயநிதியால் ஒழிக்கப்படும் என நினைப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

சனாதனம்: அவர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். ஆம் ஆத்மியை விட்டு வெளியே வர வேண்டும். நிதிஷ் குமாரை கைகழுவ வேண்டும். இவருக்கு என்ன அரசியல் ஞானம் இருந்து இதை சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை.

கவர்னரின் முதல் கடமை அரசின் சாசனத்தை காப்பதுதான்.. அரசியல் சாசனத்திற்கு மாறாக எந்த சட்டம் இயற்றப்பட்டாலும் கிடப்பில் போடுவதுதான் கடமை. அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பதும் அட்டானிக் ஜெனரல் கருத்தை கேட்பதும் நிச்சயமாக கவர்னரின் கடமையாக உள்ளது..

வெடிகுண்டு: வெடிகுண்டு வைப்பவர்களை, சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்கள்.. இதுகுறித்து தீர்மானமுமும் நிறைவேற்றுகிறார்கள். இதை எப்படி ஆளுநர் ஏற்றுக்கொள்வார்?

தற்போது, ஜார்கண்ட் மாநிலத்தில் நான் ஆளுநராக உள்ளேன். அந்த மாநிலத்தில் கூட இட ஒதுக்கீடு சர்ச்சை உள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு குறித்து நான் ஆதரிப்பேன் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு மாறாக 77 சதவீதம் இட ஒதுக்கீடு தருகின்றபோது, அங்கீகாரம் செய்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அது கவர்னரின் கடமையாகாது, அது அரசியலமைப்பு கடமையாகாது.

தமிழக முதல்வர்: முதல்வர்தான், அரசை நடத்துகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. முதலமைச்சர் என்பவர் ஏதோ தேர்தலில் வெற்றி பெற்று விட்டார் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அரசியல் சாசனம் அங்கீகரிப்பதில்லை.

10 வருட காலம் திமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை முறை ஆளுநரை ஒழிப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் முயன்றது. இப்போது உள்ள அமைச்சர்களை கண்டால் வேடிக்கையாக உள்ளது. அதிலும், கவர்னருக்கு நாங்கள் கொடுக்கும் சம்பளம் நாங்கள் தரும் பிச்சை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. திமுக அமைச்சர்கள் வாங்கும் சம்பளம் யாருடையது?, யார் தரும் பிச்சை? எல்லாம் மக்கள் வரிப்பணத்தில் தான் தரப்படுகிறது. மக்கள்தான் எஜமானர்கள். இதை தமிழகம் அமைச்சர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+