Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் சண்முகப்பிரியா.. அரசு மருத்துவமனைக்கு ஓடிவந்து.. கடைசியில பார்த்தால்? சுவற்றில் பதிந்த "முகம்"

Subscribe to Oneindia Tamil

சேலம்: 3 வயது குழந்தைக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.. அத்துடன் சுயநினைவும் இல்லாதால், சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் தந்துள்ளது.. இதையடுத்து, சேலம் போலீசார் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாநகர், குகை பகுதியை சேர்ந்தவர் பசுபதி.. 26 வயதான இவர், டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் சண்முகப்பிரியா.. 25 வயதாகிறது. இந்த தம்பதிக்கு வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

salem salem government hospital

இந்த நிலையில், பசுபதியின் நண்பர் தமிழரசனுக்கும் சண்முகப்பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது தவறான உறவில் முடிந்தது.. கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்.. கூலி தொழிலாளியான இவருக்கு 23 வயதாகிறது.

இவர்களின் தவறான உறவு பசுபதிக்கு தெரிந்து, இருவரையுமே கண்டித்துள்ளார். ஆனால், இருவருமே அவரது பேச்சை கேட்கவில்லை.. ஒருகட்டத்தில், 26 வயதான சண்முகப்பிரியா, கணவரை விட்டுவிட்டு, 2 குழந்தைகளுடன், தமிழரசனுடனேயே சென்று வாழ ஆரம்பித்துவிட்டார்.

மதுபோதை: இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகப்பிரியாவின் 3 வயது குழந்தை வெற்றிமாறன் தொடர்ந்து அழுதபடி இருந்துள்ளான். இதனால், மதுபோதையில் இருந்த தமிழரசனும், சண்முகப்பிரியாவும் ஆத்திரமடைந்து 3 வயது குழந்தையை சரமாரியாக தாக்கி உள்ளார்கள். இதனால் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்த கசிவு ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே உயிருக்கு ஆபத்தான நிலைமையும் வந்துள்ளது.

இதனால், பைக்கில் இருந்து குழந்தை கீழே விழுந்துவிட்டதாக பொய் சொல்லி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.. ஆனால், சிறுவன் சுயநினைவின்றி ஆபத்தாக இருந்ததால், சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. அத்துடன் தீவிர சிகிச்சையும் மேற்கொண்டது.

சிறுவனுக்கு சிகிச்சை: அதேபோல, சிறுவனின் உறவினர்களும் இதுதொடர்பாக புகார் தந்ததையடுத்து, தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.. இரவு நேரத்தில் அடிக்கடி சிறுவன் அழுதுகொண்டேயிருந்ததாகவும், இது தங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால், கோபத்தில் சிறுவனை சுவற்றில் தூக்கி அடித்துவிட்டதாகவும், இதில் தலை, முகமெல்லாம் சிதைந்து மயங்கி கீழே விழுந்த சிறுவன் மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றும் தமிழரசன் போலீசில் வாக்குமூலம் தந்தார்.

இதையடுத்து, தமிழரசன் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர சிறையிலடைக்கப்பட்டார். ஆனால் அதற்குள் சண்முகப்பிரியா மாயமாகிவிட்டார்.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சண்முகப்பிரியாவிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது சிகிச்சையில் இருந்த அந்த 3 வயது குழந்தை இறந்துவிட்டது. இதனால் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, விசாரணை வளையத்துக்குள் சண்முகப்பிரியாவை கொண்டு வந்துள்ளனர்..

மழலைத்தன்மை: சம்பவத்தன்று நடந்தது என்ன என்பது குறித்து, 6 வயது சிறுவன் வெற்றிவேல் போலீசாரிடம் சொல்லும்போது, "என் அப்பா, தம்பியை ரொம்ப அடிச்சிட்டாரு.. என் அப்பா, தம்பி அழுததுமே தூக்கி போட்டுட்டாரு.. கேட் மேலயே தூக்கிப்போட்டுட்டாரு.. அவன் வெளியே போய் விழுந்துட்டான்.. " என்று மழலைத்தன்மையுடன் சொன்னதை கேட்டு, அங்கிருந்த உறவினர்கள் கதறி அழுதுவிட்டனர்..

தற்போது, 3 வயது குழந்தை இறந்ததால், பசுபதியின் உறவினர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.. முதல் குழந்தையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+