புஷ்பாவை பிரிந்த சுப்பிரமணி.. கள்ளக்காதல் கொண்ட உமா.. நடுவில் புகுந்த இருவர்.. கடைசியில் ஒரு கொலை!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் மனைவியை பிரிந்து இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த பஸ் நடத்துநர், கள்ளக்காதலி மற்றும் அவருடைய இரு கள்ளக்காதலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், மல்லமுப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (49). இவர் அந்த பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராக பணியாற்றி வந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து இயங்க அனுமதி இல்லாததால் அவர் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சுப்பிரமணிக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பே, புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் ஆன 8 ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மனைவியை விட்டு பிரிந்த சுப்பிரமணி, தளவாய்ப்பட்டியில் வீடு எடுத்து வசித்து வந்தார். அப்போது உமா மகேஷ்வரி என்பவருடன் சுப்பிரமணிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி வீட்டில் கட்டிலில் படுத்துக் கிடந்த சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

காவல் நிலையம்

காவல் நிலையம்

இதையடுத்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது கழுத்திலும் ஆணுறுப்பிலும் காயமம் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருமணம்

திருமணம்

இதையடுத்து சுப்பிரமணியின் வீட்டை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு பேருடன் ஒரு பெண் நடந்து செல்லும் காட்சிகள் இருந்தன. மேலும் அதில் 3 பேரும் போகும் போது சாதாரணமாகவும் திரும்பி வரும் போது பயந்த நிலையிலும் இருந்ததை போலீஸார் அறிந்தனர். பின்னர் விசாரணையின் அடிப்படையில் சுப்பிரமணியுடன் உமா மகேஷ்வரிக்கு கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உமாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் உமாவும் ஏற்கெனவே திருமணமாகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.

விசாரணை

விசாரணை

உமாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் நாம் இருவரும் துணையை இழந்து வாழ்கிறோம். நாம் இருவரும் ஏன் ஒன்றாக வாழக் கூடாது என சுப்பிரமணி கேட்டதை அடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வேறு ஒரு வீட்டிற்கு இருவரும் குடிபெயர்ந்தனர். அப்போது சாமான்களை எடுக்க லாரியை புக் செய்தார் சுப்பிரமணி.

ஆசை

ஆசை

அப்போது உமாவை பார்த்த லாரி டிரைவர் நாகராஜனுக்கு அவருடன் உல்லாசமாக இருக்க ஆசை ஏற்பட்டது. இதையடுத்து சுப்பிரமணி இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த நாகராஜன், உமாவுடன் தனது கள்ளக்காதலை வளர்த்துள்ளார். இது போல் நாகராஜனுக்கு தெரியாமல் கண்ணன் என்பவருடன் உமாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுப்பிரமணி, நாகராஜன் இல்லாத நேரத்தில் உமா வீட்டில் கண்ணன் வந்து சென்றுள்ளார்.

சுப்பிரமணி

சுப்பிரமணி

இந்த விவகாரம் நாகராஜனுக்கு தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணிக்கு தெரியாமல் பார்த்து கொள்வோம் என நாகராஜனும் கண்ணனும் உடன்படிக்கைக்கு வந்தனர். ஆனால் இந்த லீலைகள் சுப்பிரமணியனுக்கு தெரியவரவே அவர் உமாவை கண்டித்துள்ளார். இதையடுத்து அவரை கொல்ல நினைத்து சுப்பிரமணிக்கு கடந்த 11 ஆம் தேதி இரவு பழச்சாற்றில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார் உமா.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

அவர் மயங்கியவுடன் இரு கள்ளக்காதலன்களையும் வர சொல்லியுள்ளார். அப்போது இருவரும் சுப்பிரமணியின் கைகால்களை பிடித்துக் கொள்ள, உமா, அவரது கழுத்தை நெரித்தார். அப்போது விழித்துக் கொண்ட சுப்பிரமணி திமிறினார். இதனால் உமா அவரது ஆணுறுப்பை நசுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து மூவரும் கிளம்பி வெளியே சென்றுவிட்டனர். மறுநாள் வீட்டுக்கு வருவது போல் வந்த உமா, சுப்பிரமணி இறந்தது குறித்து அழுது புரண்டுள்ளார். தற்போது மூவரையும் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+