"சில்லி சிக்கன்" சசிகலா.. கோச்சிங் சென்டர் போன இடத்தில் "புது உறவு".. கடைசியில் நடந்த பகீர்
சசிகலாவை கொன்ற கணவன் உட்பட 2 பேர் கைதாகி உள்ளனர்
சேலம்: சேலம் பெண் சசிகலா உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இத்தனை நாள் மர்ம மரணம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது விநாயகபுரம் என்ற பகுதி.. இங்கு சில்லி சிக்கன் கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார்.. 40 வயதாகிறது.
இவரது மனைவி பெயர் சசிகலா.. திருமணமாகி 10 வருடமாகிறது.. லவ் மேரேஜ் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

சசிகலா
பிஎஸ்சி, பிஎட் படித்து முடித்துள்ளார் சசிகலா.. டீச்சர் வேலைக்கு செல்லவும் விரும்பினார்.. இதற்கான தகுதிதேர்வு எழுதுவதற்காக கடந்த சில மாதங்களாக கோச்சிங் கிளாஸ் சென்று வந்திருக்கிறார்.. ஆனால் கோச்சிங் கிளாஸ் சென்று வந்ததில் இருந்தே, சசிகலாவின் நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட்டு வந்துள்ளது.. எந்நேரமும் போனில் யாரிடமோ பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது... இதை கவனித்துவிட்ட கணவர், சசிகலாவிடம் இதை பற்றி விசாரித்துள்ளார்..

சசிகலாவின் உறவு
இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென சசிகலா 2 நாளைக்கு முன்பு இறந்துவிட்டார்.. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் சொன்னார்கள்.. பிறகு சசிகலாவின் சடலத்தை, ஜெயக்குமார் தன்னுடைய சொந்த ஊரான கோவிந்தராஜபாளையத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்.. இதனால் ஊர் மக்கள் திரண்டு ஓடிவந்தனர்.. என்னாச்சு சசிகலாவுக்கு என்று கேட்டுள்ளனர்..

சந்தேகம்
"திடீரென தற்கொலை செய்துக்கிட்டார், என்ன காரணம் என்று தெரியவில்லை.. அடக்கம் செய்ய வந்துள்ளோம்" என்று ஜெயக்குமார் சொன்னார். ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. காரணம், சசிகலாவின் சடலம் கொண்டு வரப்பட்டபோது, இறுதிசடங்கிற்கு அவரது குடும்பத்தில் இருந்து யாருமே வரவில்லை.. எனவே, சிறுவாச்சூரில் உள்ள சசிகலாவின் அம்மாவுக்கு ஊர் மக்களே தகவல் சொன்னார்கள்.. இவர்கள் சொல்லிதான் சசிகலா அம்மாவுக்கு விஷயம் தெரிந்தது..

கதறல்
கதறி அழுதபடி உறவினர்களுடன் வந்து கோவிந்த ராஜபாளையத்திற்கு வந்து சேர்ந்தார்.. மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆத்தூர் போலீசிரும் புகார் தந்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சசிகலாவின் சடலத்தை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள் ஜெயக்குமார் எஸ்கேப் ஆகிவிட்டார்..

சடலம்
அப்போதுதான், மரணத்தில் சந்தேகம் அதிகமானது.. மர்மச்சாவு என வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை தேட ஆரம்பித்தனர்.. இதனிடையே, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்து சடலத்தை ஒப்படைக்க முயன்றபோது, அதை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.. ஜெயக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தி சடலத்தையும் ஒப்படைத்தனர். சசிகலாவின் சொந்த ஊரான சிறுவாச்சூரில் உடல் அடக்கம் செய்தனர்.

எஸ்கேப்
மற்றொரு புறம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், சசிகலாவை கொலை செய்ததை ஜெயக்குமார் சொன்னார்.. ஜெயக்குமார் வாக்குமூலத்தில், "நானும் சசிகலாவும் காலேஜில் படித்தபோது காதலித்தோம்.. 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டோம்.. சமீப காலமாக சசிகலாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.. யாருடனோ போனில் பேசி கொண்டேயிருந்தார்..

கயிறு
அதனால் தகராறு அடிக்கடி ஏற்படும்.. 2 நாட்களுக்கு முன்பும் அப்படித்தான் தகராறு வந்தது.. கீழே கிடந்த கயிற்றை எடுத்து சசிகலாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டேன்.. சடலத்தை எரிப்பதற்காக என் பெரியப்பா செல்வராஜ் உதவினார்" என்றார்.. இதையடுத்து, ஜெயக்குமார், செல்வராஜ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications