அவன்தான்டா பெரிய வேலய பாத்துட்டு போயிட்டான்! சிறுத்தை பாணி.. காசுக்கு ஆசைப்பட்டு மொட்டை போட்ட லேடீஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் புதுவித நோய் பரவுவதால் பெண்கள் மொட்டை அடித்தால் ரூ. 15 ஆயிரம் தருவோம் என்று தாசில்தார் அலுவலகத்தில் இருந்து போன் செய்வதாக பேசிய ஆசாமியின் பேச்சை நம்பி 3 பெண்கள் மொட்டை அடித்து ஏமாற்றமடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த, பழனியம்மாள், 30. இவருக்கு, நேற்று, இரவு, 8:00 மணியளவில், மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தார் பேசுவதாகவும், அந்த பெண்ணின் பெயர், குடும்ப உறுப்பினர்களது பெயர்களை கூறியுள்ளார்.

தொடர்ந்து, கொரோனா போன்று புதுவிதமான நோய் பரவி வருகிறது. இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால், வெளிநாடுகளில் மொட்டை அடித்துக் கொண்டு நோயில் இருந்து தப்பித்துள்ளனர். அவ்வாறு, மொட்டை அடித்தால் நோய் தாக்கம் ஏற்படாது.

Salem Women Government Scheme

மொட்டை அடிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகையாக, பெண்கள் என்றால், தலா, 15 ஆயிரம் ரூபாயும்; பள்ளி, கல்லுாரி மாணவிகள் என்றால், தலா, 45 ஆயிரம் ரூபாய் மற்றும் மடிக்கணினி; ஆண்களுக்கு, தலா, 6,000 ரூபாய் வழங்கப்படும் என, கூறியுள்ளனர். புதுகொத்தாம்பாடிக்கு, 18 டோக்கன் மட்டுமே உள்ளதால், உங்களது உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவித்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

இன்று, மதியம், 2:00 மணியளவில், பணத்துடன் வருவதாகவும், நாங்கள் வருவதற்குள், மொட்டை அடித்து தயார் நிலையில் உள்ளவர்களுக்கு, அதிகாரிகள் பணம் வழங்குவார்கள் என, அதே நபர் கூறியுள்ளார். அந்த நபரின் பேச்சை நம்பிய 20 பேர், மொட்டை அடிக்க தயாராகினர். இதில், காவேரி, 56, ராமாயி, 58, சித்ரா, 60, ஆகிய மூன்று பேர் மொட்டை அடித்த நிலையில், பணம் தருவதாக கூறிய நபரை, தொடர்பு கொண்டபோது, அவரது போன் 'ஸ்விட்ச் ஆப்' ஆக இருந்தது.

அதன்பின் தான், மொட்டை அடிக்கச் சொல்லி ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. மற்ற நபர்கள், மொட்டை அடிப்பதை தவிர்த்தனர். இதுகுறித்து, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து, புதுகொத்தாம்பாடி பழனியம்மாள் கூறுகையில், 'ஆத்துார் தாலுகா அலுவலக தாசில்தார் பேசுவதாகவும், புதுவித நோய் தடுக்க, மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

அவ்வாறு இல்லை எனில், அத்தொகையை அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றனர். சந்தேகமிருந்தால் ஏற்கனவே மொட்டை அடித்த நபர்களது புகைப்படங்கள் அனுப்புகிறேன் என்று, பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவிகள் மொட்டை அடிக்கும் புகைப்படங்கள், கட்டு கட்டாக, 500 ரூபாய் நோட்டுகள் என, வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்தனர். பணம் கொடுப்பதற்கு சேர், டேபிள் போட்டு தயார் நிலையில் வைத்திருங்கள் என்றனர். இவற்றை நம்பி, அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்த நிலையில், மதியம், 3:00 மணிக்கு மேல், அவரது மொபைல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

உள்ளூர் நபரை வரவழைத்து, மூன்று பேர் மட்டும் மொட்டை போட்டனர். மொட்டை அடிக்கும்படி கூறி ஏமாற்றிய ஆசாமியை கண்டறிந்து, தமிழக அரசும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' இவ்வாறு கூறினார். மொட்டை அடித்தால் பணம் கிடைக்கும் என்று, மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுபோன்று, தமிழக அரசு பெயரை கூறி புதுவிதமான முறையில் பெண்களை குறிவைத்து மோசடி செய்துள்ள கும்பலை கண்டறிந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+