சேலம் ஏற்காட்டில் இன்று மலர் கண்காட்சி ஆரம்பம்.. கோடை விழாவில் பெரிய சர்ப்ரைஸ் உண்டு மக்களே.. ரெடி?
சேலம்: சேலம் ஏற்காட்டில் இன்று மாலை கோடை விழா கோலாகலமாக துவங்குகிறது... தமிழகத்தின் 3 அமைச்சர்கள் இந்த விழாவை துவக்கி வைக்கிறார்கள்.. அத்துடன் , பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்க உள்ளனர்.. இன்று ஏற்காட்டில் 48வது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சியை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து வருகிறார்கள்..
ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி இன்று வெள்ளிக்கிழமை துவங்கி வரும் 29ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.. இந்த விழாவை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர், இன்று மாலை 4 மணிக்கு துவங்கி வைக்கின்றார்கள்.

ஏராளமான நலத்திட்ட உதவிகள்
பிறகு, வேளாண்மைத்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பட்டு வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவிருக்கிறார்கள். அமைசசர்களுடன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
இன்னிசை, கலை நிகழ்ச்சிகள்
இந்த கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறிக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.. மேலும், 25,000க்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகளை கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.. அதேபோல, வனவிலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண வண்ண பூக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, கோலப்போட்டி, படகு போட்டிகள் போன்றவை சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்படவுள்ளன. இதனை தவிர, செல்லப் பிராணியான நாய்கள் கண்காட்சி, கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் உட்பட ஏராளமான கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
ஸ்பெஷல் பஸ்கள்
இன்று மலர்கண்காட்சி என்பதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இன்று முதல் 1 வாரத்துக்கு ஏற்காட்டிற்கு மேலே செல்லும் வாகனங்கள், கோரிமேடு-அடிவாரம் வழியாக செல்ல வேண்டும் என்றும் ஏற்காட்டில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் கொட்டச்சேடு-குப்பனூர் வழியை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல, சுற்றுலா பயணிகளுக்காக, சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.. தற்போதுள்ள 12 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏரி, பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட் போன்றவற்றை இணைக்கும் வகையில் இரண்டு உள்வட்ட ஸ்பெஷல் பஸ்களும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications