"நாட்டாமை".. மேடைக்கு வந்த சரத்குமார்.. பக்கத்திலேயே பார்த்தா யார் அது? குஷ்புவா.. என்ன சொன்னாங்க?

Subscribe to Oneindia Tamil

சேலம்: லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

Sarathkumar met Kushboo on the PM Modi Salem BJP meeting for Lok Sabha elections 2024

இதையடுத்து பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளார். மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வரும் இந்த நிகழ்வில் கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர். ஓ பன்னீர்செல்வம், பாமகவின் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர் . அதேபோல் டிடிவி தினகரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

பாஜக நடத்தும் முக்கியமான தேர்தல் கூட்டமாக இது பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் சேலம் வரும் பிரதமர் மோடி என்பதால் பாஜக இதை பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. பிரதமர் வருவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரத் குமார்: இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் மேடைக்கு சரத் குமார் வந்தார். மேடையில் அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் முதல் ஆளாக சரத் குமார் அமர்ந்து இருந்தார். அவரை தொடர்ந்து குஷ்பு மேடைக்கு வந்தார். சரத்குமாருக்கு இரண்டு சேர்கள் தாண்டி குஷ்பு அமர்ந்த பின்தான் திடீரென சரத் குமாரை பார்த்தார்.

இருவரும் நீண்ட நாட்களுக்கு பின் இப்படி பொதுவாக அரசியல் மேடையில் சந்திப்பு நடத்திய நிலையில் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். இருவரும் நாட்டாமை உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்த நிலையில் தற்போது பாஜக கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றி உள்ளனர்.

கட்சியை கலைத்த சரத்குமார்: 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைந்துள்ளார் சரத் குமார். அதிமுகவிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பாஜக உடன் கூட்டணி என்று சரத்குமார் அறிவித்த நிலையில், இப்போது கட்சியையே பாஜகவில் இணைத்துள்ளார்.

சரத் குமார் பேச்சு: மனைவியிடம் கேட்டு கட்சியை இணைத்தேன் என்று சரத்குமார் பேசி உள்ளார் . அதில், நள்ளிரவு 2 மணி இருக்கும்... அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர் "நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன், என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+