ஒரு டீச்சர் செய்ற வேலையா இது.. கிச்சனுக்குள் ஓடிச்சென்று.. வாயடைத்து போன வாழப்பாடி..!
வாழப்பாடியில் கணவனை கொன்ற மனைவி கைதாகி உள்ளார்
சேலம்: ஒரு டீச்சர் செய்யக்கூடிய காரியமா இது என்று வாழப்பாடி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. இப்போது டீச்சரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி என்ற கிராமம் உள்ளது.. அந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. 35 வயதாகிறது.. இவருடைய மனைவி பெயர் இளமதி.. 30 வயதாகிறது.
இவர்களுக்கு 10 வயதில் தக்சிந்த் என்ற மகனும், அக்சிதா என்ற 6 வயது மகளும் உள்ளனர்.. வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் இளமதி.

தகராறு
மணிகண்டன் தினமும் தண்ணி அடிப்பாராம்.. தண்ணி அடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து தகராறும் செய்வாராம்.. அப்படித்தான் நேற்றும் தகராறு செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் இளமதியை தாறுமாறாக, அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டார்.. வலிபொறுக்க முடியாமல் இளமதி கதறி உள்ளார்..

உருட்டுக்கட்டை
பிறகு பொறுமை இழந்தநிலையில், இளமதி நேராக கிச்சனுக்கு சென்று, ஒருபெரிய உருட்டுக்கட்டையை எடுத்து வந்து மணிகண்டனை பதிலுக்கு தாக்கிவிட்டாராம்.. இதில், மணிகண்டனுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டி உள்ளது. அப்படியே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தும் போய்விட்டார்..

விசாரணை
இந்த கொலை குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் டீச்சர் இளமதியிடம் விசாரணை நடத்தினர்... அந்த விசாரணையில்தான் தெரியவந்தது, மணிகண்டன் எம்ஃபில் பட்டதாரியாம்.. டீச்சர் பிஎட் பட்டதாரி.. 2 பேரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.. பக்கத்து பக்கத்து ஊர்.. ஆனால் ஒரே காலேஜில் படிக்கும்போது லவ் வந்துள்ளது.. 2 பேர் வீட்டிலும் எதிர்ப்பு.. அதனால், வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துள்ளனர்..

கைது
ஆரம்பத்தில் சென்னையில் அரசு பூம்புகார் நிறுவனத்தில்தான் மணிகண்டனுக்கு வேலை கிடைத்திருக்கிறது.. ஆனால், அந்த ஆபீசில் ஏதோ பிரச்சனை காரணமாக மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்... இதனால்தான் தினமும் குடிப்பது ஆரம்பமாகி உள்ளது.. அந்த எரிச்சலையும், கோபத்தையும் மனைவி மீது காட்டி வந்துள்ளார்.. நேற்று சாயங்காலம் இந்த தகராறு அத்துமீறவும்தான், இளமதி அவரை அடித்து தாக்கியதாக தெரிகிறது. டீச்சரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications