இரவில் தூங்கியபோது.. ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சேலம் கல்லூரி உதவி பேராசிரியர் கைது
சேலம்: ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் உப்பள்ளிக்கு சென்ற ரயிலில் தந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேலம் அரசு கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வாராந்திர ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.55 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 7.55 மணிக்கு உப்பள்ளிக்கு சென்றடையும்.

இந்த ரயில் மன்னார்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் சந்திப்பு, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் பானசாவடி, யஷ்வந்த்பூர் சந்திப்பு, துமகூரு, அரிசிகெரோ, பீரூர், சிக்ஜாஜூர் சந்திப்பு, தாவணகெரே, ஹரிகர், ராணிபென்னூர், ஹாவேரி வழியாக உப்பள்ளிக்கு சென்றடையும்.
இந்நிலையில் தான் ஓசூரில் உள்ள தொழிற்பேட்டையில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 27 வயது பெண் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்தார். இதுதான் அவரது சொந்த ஊராகும். இந்நிலையில் தான் விடுமுறை முடிந்த நிலையில் அவர் மீண்டும் ஓசூர் புறப்பட்டு ரயிலில் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது தந்தையும் பயணித்தார்.
இந்த ரயில் இரவில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பெண்ணின் இருக்கைக்கு மேல் இருக்கையில் படுத்திருந்த நபர் கீழே இறங்கி வந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திடுக்கிட்டு கண்விழித்தார். மேலும் சம்பவம் குறித்து அவர் தனது தந்தை மற்றும் பிற பயணிகளிடம் கூறினார்.

இதையடுத்து அந்த நபரை பிடித்து அவர்கள் விசாரித்தனர். அப்போது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் அவரை பிடித்து டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரைண நடத்தினர்.
இந்த விசாரணையில் அவரது பெயர் சையது இப்ராஹிம் ( வயது 57) என்பதும், அவர் சேலம் சூரமங்கலம் அருகே பாரதிநகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையிலும் அடைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications