வேலையைக் காட்டிய வெள்ளி விலை உச்சம்! சேலத்தில் கொலுசு உற்பத்தி கடும் பாதிப்பு! 90% வரை சரிந்த ஆர்டர்
சேலம்: கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் வெள்ளி விலை, சேலம் மாவட்டத்தின் பாரம்பரிய தொழிலான கொலுசு உற்பத்தித் துறையை கடுமையாக பாதித்துள்ளது. வெள்ளி விலை உயர்வின் காரணமாக, கொலுசுகளுக்கான ஆர்டர்கள் சுமார் 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் வெள்ளி கொலுசு உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டமாக சேலம் திகழ்கிறது. இங்கு உள்ள சிவதாபுரம், சேவாபேட்டை, நேத்திமேடு, மணியனூர், பொன்னம்மாபேட்டை, கோட்டை, சூரமங்கலம், சேலத்தாம்பட்டி, ஜாகீர் அம்மாப்பாளையம், பனங்காடு, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தி யூனிட்கள் இயங்கி வருகின்றன.
இந்தத் தொழிலின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். சேலத்தில் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள நகைக்கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் சமீபகாலமாக வெள்ளி விலை கடுமையாக உயர்ந்ததால், வியாபாரிகள் ஆர்டர்களை குறைத்துள்ளனர். இதன் விளைவாக, வழக்கமாக கிடைக்கும் ஆர்டர்களில் தற்போது 10 சதவீதம் மட்டுமே வருவதாகவும், குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வர வேண்டிய பெரிய அளவிலான ஆர்டர்கள் கூட இந்த ஆண்டு வராததால் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் வெள்ளிப் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன.
கொலுசு தயாரிப்பில் உருக்குப் பட்டறை, கம்பி பட்டறை, மெருகூட்டும் பட்டறை, பூ பட்டறை உள்ளிட்ட 13 வகையான துணை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. ஆர்டர்கள் குறைந்துள்ளதால், இந்த பட்டறைகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பலர் மாற்றுத் தொழில்களை தேடி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளி விலை உயர்வு நீடித்தால், சேலத்தின் பாரம்பரிய கொலுசு தொழில் மேலும் நலிவடையும் அபாயம் இருப்பதாக உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். அரசு தரப்பில் உரிய உதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவது அனைவரும் தெரிந்த விஷயம் தான். ஆனால், சமீப காலமாக தங்கத்துக்கு நிகராக வெள்ளி விலையும் அதிரடி உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளி விலை குறித்த விவாதங்கள் பொருளாதார வட்டாரங்களில் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று காலை நேரத்தில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்த வெள்ளி விலை, பிற்பகல் நேரத்தில் மீண்டும் ரூ.10 உயர்ந்ததால், ஒரே நாளில் மொத்தமாக ரூ.20 உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.365 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.3.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications