செல்ஃபி ரூபத்தில் அழைத்த எமன்.. ஏற்காடு நீர் வீழ்ச்சியில் சறுக்கி விழுந்து பலியான தந்தை, மகள்
சேலம்: ஏற்காட்டில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற போது கால் தவறி விழுந்த மகளை காப்பாற்ற தந்தை முயன்ற போது இருவரும் தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோடை வெயிலை சமாளிக்க கடந்த சில நாட்களாக மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளியல் போட்டு உடல் சூட்டை தணித்து வருகிறார்கள். அது போல் சிலர் மூணாறுக்கும் செல்கிறார்கள்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மேற்கண்ட சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக இருக்கிறது. அங்குள்ள விடுதி அறைகளும் ஏறத்தாழ ஹவுஸ்புல் என்ற நிலையில் இருக்கிறது. 365 நாட்களில் வார விடுமுறை, பண்டிகை தினங்கள் போக மீதமுள்ள நாட்களில் படிப்பது, வேலைக்கு செல்வது, குடும்பத்தை கவனிப்பது என இருந்து விடுகிறோம்.
எனவே ஒரு சிறிய பிரேக் வேண்டும் என்பதால் உறவினர் வீட்டுக்கு செல்வது, சுற்றுலாவுக்கு செல்வது என்பதை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் பாலமுரளி (43).
இவர் மனைவி சுந்தரலட்சுமி (41), மகள்கள் சவுமியா (13), சாய் சுவேதா (3) உள்பட 6 பேருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். நேற்று மதியம் குடும்பத்துடன் ஏற்காட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வெள்ளக்கடை கிராமத்தை அடுத்துள்ள நல்லூர் நீர்வீழ்ச்சி பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். குளித்து முடித்துவிட்டு மகள் சவுமியா அங்கிருந்த பாறையில் ஏறினார்.
மகள் தனியாக பாறையில் ஏறுகிறாரே என்பதற்காக பாலமுரளியும் அந்த பாறையில் ஏறினார். அப்போது பாறையில் இருந்த பாசை வழுக்கியதில் சவுமியா கீழே விழுந்தார். அவரை பிடிக்க சென்ற பாலமுரளியும் கால் இடறி கீழே விழுந்தார். இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். உடனடியாக ஏற்காடு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் இருவரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரும் பாறை மீது ஏறி செல்பி எடுக்க சென்றதாக குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இனி நல்லூர் நீர்வீழ்ச்சி பகுதியில் யாரும் குளிக்கக் கூடாது என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். சுற்றுலா தலங்களில் பயணிகளின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications