இது லாஸ்ட் சான்ஸ்... பாவமன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள் முதலமைச்சரே.. சேலத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்..!
சேலம்: மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாவமன்னிப்பு தேடிக்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய விவசாய சட்டங்களால் ஏற்படவிருக்கும் பாதகங்கள் பற்றி சரியான புரிதலின்றி முதலமைச்சர் பேசி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் கோடிக்கணக்கான விவசாய பெருங்குடி மக்களுக்கு தாம் சல்யூட் அடிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் ஸ்டாலின்
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு திமுகவின் ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. அதில் சேலத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

திருமண மண்டபம்
சேலம் எருமபாளையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக சங்ககிரி, எடப்பாடி, கெங்கணாபுரம், ஆத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும், திமுகவினர் திரண்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் வரும் வழிகளிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

காலை 10.30 மணி
இந்த தகவல் ஸ்டாலினுக்கு கொண்டு செல்லப்பட்டதும் கொந்தளிக்கத் தொடங்கிய அவர் நானே சாலையில் இறங்கிவிடுவேன் என எச்சரிக்கை விடுத்தார். இது போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் எல்லாம் காலை 9.30 மணியளவில் போராட்டம் தொடங்கிய நிலையில் சேலத்தில் மட்டும் 10.30 மணி வரை தொடங்கவில்லை.

மத்திய அரசு
இதையடுத்து போலீஸார் மீது மிகுந்த கோபத்துடன் விடுதியில் இருந்து கார் ஏறிய ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சர் மீதும் காவல்துறையினர் மீதும் சீறத் தொடங்கிய அவர் மத்திய அரசு மீதும் பாய்ந்தார்.

பாவ மன்னிப்பு
விவசாய சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். மேலும், இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை செய்த பாவத்திற்கு பாவமன்னிப்பு தேட வழி சொல்வதாக கூறிய ஸ்டாலின், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சுதந்திர இந்தியா
சுதந்திர இந்தியாவில் தற்போது நடைபெறுவது போன்ற விவசாயிகள் போராட்டத்தை நாடு கண்டதில்லை என்றும் விவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும் எனவும் ஸ்டாலின் உறுதிமொழி அளித்தார். உண்மை தெரியாமல் விவசாய சட்டங்கள் குறித்து பேசுவதை முதலமைச்சர் கைவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
-
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications