எடப்பாடி முதல் ஏற்காடு வரை.. தரமான முடிவெடுத்த திமுக.. எகிறவைக்கும் சேலம் 'லிஸ்ட்'

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் ஓமலூர் தொகுதியை தவிர்த்து மற்ற 10 தொகுதிகளிலும் திமுக நேரடியாக களம் இறங்கி உள்ளது. ஓமலூரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 10 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில், திமுக கூட்டணியில் ஓமலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. (சேலம் வடக்கு தொகுதியில் ஆர்.ராஜேந்திரன் 86583 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்). மற்ற எல்லா தொகுதியிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் பாமக பிரித்த வாக்குகள். இந்த முறை பாமகவும் அதிமுகவுடன் சேர்ந்துள்ளது. இருந்த போதிலும் இளம் வேட்பாளர்களை களம் இறக்கி திமுக சேலம் மாவட்டத்தில் தேர்தலை சந்திக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. அப்போது எல்லா தொகுதியிலும் வலுவான வாக்குகள் பெற்றிருந்தது.

7 பேர் புதியவர்கள்

7 பேர் புதியவர்கள்

எனவே அந்த பலத்தின் அடிப்படையில் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர் (தனி), வீரபாண்டி ஆகிய 7 தொகுதிகளில் புதுமுகங்களை போட்டியிட வைத்துள்ளது ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய இரு தனி தொகுதிகளில் மட்டும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சரவணன்

சரவணன்

வேட்பாளர்கள் விவரத்தை இப்போது பார்ப்போம்:

சேலம் தெற்கு:
வேட்பாளர்: ஏ.எஸ்.சரவணன் (49)
ஊர்: களரம்பட்டி, சேலம்
கல்வித்தகுதி: 7ஆம் வகுப்பு
கட்சிப் பதவி: தாதகாப்பட்டி பகுதி செயலாளர்
தொழில்: ஜவுளி ஏற்றுமதி

ஆர்.ராஜேந்திரன்

ஆர்.ராஜேந்திரன்

சேலம் வடக்கு:
வேட்பாளர்: ஆர்.ராஜேந்திரன் (62)
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: பி.ஏ., பி.எல்.,
கட்சி பதவி: சேலம் மத்திய மாவட்டச் செயலாளர்
தொழில்: வழக்கறிஞர், விவசாயம்

சேலம் மேற்கு:
வேட்பாளர்: ஏ. ராஜேந்திரன் (53)
ஊர்: சேலத்தாம்பட்டி
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு
கட்சிப் பதவி: தலைமை பொதுக்குழு உறுப்பினர், சேலத்தாம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர்.
தொழில்: வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்

சம்பந்த்குமார்

சம்பந்த்குமார்

எடப்பாடி:
வேட்பாளர்: சம்பத்குமார் (37)
ஊர்: கொங்கணாபுரம்
கல்வித் தகுதி: பட்டதாரி
கட்சிப் பதவி: சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்
தொழில்: விவசாயம்

2 பெண்கள் போட்டி

2 பெண்கள் போட்டி

கெங்கவல்லி (தனி):
வேட்பாளர்: ஜெ.ரேகா பிரியதர்ஷினி (38)
கணவர்: பாபு (துணை ஆட்சியர்)
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: எம்ஏ., எம்பில்., எம்ஏ (பொது நிர்வாகம்), பிஹெச்.டி.,
தொழில்: குடும்பத் தலைவி

ஆத்தூர் (தனி):
வேட்பாளர்: ஜீவா ஸ்டாலின் (32)
கணவர்: ஸ்டாலின்
தொழில்: விவசாயம், ரியல் எஸ்டேட்
ஊர்: ஆத்தூர்
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு
கட்சிப் பதவி: 9வது வார்டு மகளிரணி செயலாளர்

மேட்டூர்

மேட்டூர்

ஏற்காடு (தனி):
வேட்பாளர்: சி. தமிழ்செல்வன் (50)
ஊர்: பேளூர்
தொழில்: விவசாயம்

மேட்டூர்:
வேட்பாளர்: எஸ்.ஸ்ரீனிவாசபெருமாள் (47)
ஊர்: மேச்சேரி
கல்வித்தகுதி: பிளஸ் 2
கட்சி பதவி: மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர்
தொழில்: திரையரங்க உரிமையாளர்

வீரபாண்டி

வீரபாண்டி

சங்ககிரி:
வேட்பாளர்: கே.எம்.ராஜேஷ் (41)
ஊர்: சங்ககிரி
கல்வித்தகுதி: பட்டதாரி
கட்சிப் பதவி: ஒன்றிய பொறுப்பாளர்
தொழில்: பள்ளிக்கூடம், பேருந்து உரிமையாளர்


வீரபாண்டி:
வேட்பாளர்: மருத்துவர் கே.தருண் (40)
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: எம்பிபிஎஸ்., எம்எஸ்., எம்பிஏ.,
கட்சி பதவி: தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர்
தொழில்: மருத்துவர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+