Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்.. பணப்பலன்கள் கிடைக்க போகுது.. குஷியில் போக்குவரத்து துறை

Subscribe to Oneindia Tamil

சேலம்: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, மகிழ்ச்சிகரமான செய்தியை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.. இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் பலரும் வரவேற்பையும் ஆதரவையும் தந்து வருகிறார்கள்..

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது.

tamilnadu government transport employees and what did minister KN Nehru say

அரசு ஊழியர்கள்: எனவேதான், தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.

அரசு ஊழியர்கள்: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட நிலையில், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதாவது, 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இதுஒருபக்கம் இருந்தாலும், போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சேலத்தில், அமைச்சர் கே.என்.நேரு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் இன்று வழங்கப்பட்டன..

tamilnadu government transport employees and what did minister KN Nehru say

கலைஞர் கருணாநிதி: இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பேசும்போது, "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தை மறைந்த முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். 1971ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது, அதனை பொது உடைமையாக்கி அனைவருக்குமான சேவையாக மாற்றினார். மறுபடியும் கருணாநிதி முதல்வராக இருந்த 1990ம் ஆண்டு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 80 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவை அனைத்தையும் நிறைவேற்றி தந்தார்.. அதேபோல, 2006 - 2011 காலகட்டத்தில் போக்குவரத்து துறையில் 15,000 புதிய பஸ்களை கருணாநிதி வாங்கினார்... இந்த காலகட்டத்தில் சுமார் 60 ஆயிரம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டனர். சேலத்திற்கு மட்டும் 5,600 ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

பணப்பலன்கள்: இப்படிப்பட்ட நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 8,361 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட 1582.44 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பலன்களை வழங்க நம்முடைய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+