தை பொங்கல் உற்சாகம்.. மாட்டு வண்டியில் மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி.. சொன்னதை கவனிச்சீங்களா?
சேலம்: தை பொங்கலை உற்சாகமாக கொண்டாடுவதை போன்று, லோக்சபா தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடும் காலம் வந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரையுலகினர் குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திண்டமங்கலம் மாரியம்மன் கோயில் திடலில், அதிமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
கருப்பு வெள்ளை சிவப்பு என மூன்று வண்ணத்தில் அதிமுக கொடி போல வண்ணம் தீட்டப்பட்ட மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் ஊர்வலமாக வந்தார் எடப்பாடி பழனிசாமி. தொண்டர்களுடன் பலரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைக்க எடப்பாடி பழனிச்சாமி பானைகளில் அரிசி வெல்லத்தை போட்டு வாழ்த்து கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு பானையில் பொங்கல் வைத்தார். பின்னர் பொங்கல் விழாவில் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், சேலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
திமுக ஆட்சியில் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, தை பொங்கலை உற்சாகமாக கொண்டாடுவதை போன்று, நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடும் காலம் வந்து விட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்.

இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் என்ன நன்மையை அனுபவித்தார்கள். ஏழை எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் மீதும் துளியும் கவலையில்லை இல்லாத அரசாக திமுக உள்ளது. நியாய விலைக் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு முறையே பொருட்கள் வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை வன்மையாக கண்டிக்கிறேன்.












Click it and Unblock the Notifications