பரஸ்பர நலம் விசாரிப்பு! கொஞ்சம் டீ -கொஞ்சம் அரசியல்! தமிமுன் அன்சாரி -எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிமுன் அன்சாரி சந்தித்து பேசும் தகவலை ஒன் இந்தியா தமிழ் தான் முதலாவதாக வெளியிட்டது.
அதன் அடிப்படையில் இருவர் சந்திப்பின் போது நிகழ்ந்த சுவாரஸ்ய தகவல்களை பற்றியும் இங்கே பார்க்கலாம். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு காலை 11.30 மணியளவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தனது கட்சி சகாக்களுடன் சென்றிருக்கிறார்.

அப்போது அவரை வாசலில் நின்று வரவேற்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வீட்டிற்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். எடப்பாடிக்கு கொடுப்பதற்காக தமிமுன் அன்சாரி எடுத்துச் சென்ற புத்தகத்தில், ''துணிவான முடிவு பல வெற்றிகளை தேடி தரும்'' என்று கைப்பட எழுதி தமிமுன் அன்சாரி கையெழுத்திட்டு பரிசளித்தருக்கிறார்.
அதைத் தொடர்ந்து முதலில் பரஸ்பர நலம் விசாரிப்பு படலங்கள் நடந்திருக்கிறது. பிறகு டீ சாப்பிட்டுக் கொண்டே பழைய கூட்டணி நட்பு மற்றும் நினைவலைகள் பற்றி பேச்சு சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் கூட்டணி பற்றி பேச்சு நீளுமோ என்று சுதாரித்துக் கொண்ட தமிமுன் அன்சாரி, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை பற்றி கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதனை வைத்த கண் வாங்காமல் காது கொடுத்துக் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி சட்டசபையில் இது பற்றி பேசுகிறேன் என்ற உறுதியை அளித்திருக்கிறார். இருவருக்கும் இடையே இன்னும் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச்சு சென்றிருக்கிறது. தமிமுன் அன்சாரியை மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடுங்க என நேரில் அழைக்காத குறையாக சூசகமாக வேலுமணியும், எடப்பாடி பழனிசாமியும் பேச்சுக்களை கொண்டு சென்றிருக்கின்றனர்.
நாம் முன்னரே சொன்னது போல் டிசம்பர் வரை கூட்டணி பற்றி முடிவெடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த தமிமுன் அன்சாரி கையில் கொண்டு சென்ற கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய தகவல் என்னவென்றால், தமிமுன் அன்சாரியை சரி போயிட்டு வாங்க என எடப்பாடி பழனிசாமி அனுப்பவில்லை. தமிமுன் அன்சாரி தான் நாங்கள் புறப்படுகிறோம் எனக் கூறி அரைமணி நேரத்தில் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்.
மஜக சார்பில் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட்ட கடிதம் விவரம் வருமாறு;
''சமீபத்தில் அ.தி.மு.க, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அறிவிப்பை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இது தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்திற்கும், சமூக நீதிக்கும் நலம் பயக்கும் செய்தியாக அறிகிறோம். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட இது பெரிதும் உதவும் என நம்புகிறோம்.
மேலும், சமீபத்தில் அ.இ.அ.தி.மு.க நடத்திய மதுரை பொன்விழா மாநாட்டில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை குறித்து நல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதற்காக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறோம். இந்த கருத்தியலில் தங்கள் கட்சியும் உடன்பட்டிருப்பது நம்பிக்கையூட்டுகிறது. இந்நிலையில், சமூக வழக்குகள் தொடர்புடைய 36 முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட பலரின் விடுதலையில் பாரபட்சம் காட்டப்படுவதாக பரவலாக கருத்துள்ளது.
இவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் 161-வது சட்ட பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் .
இத்தீர்மானத்தை ஆளுநர் மறுத்தாலும், அது சட்டப் போராட்டத்திற்கு பெரிதும் உதவிகரமாக அமையும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில், தங்கள் தலைமையிலான அதிமுக அரசு 161-வது சட்ட பிரிவின்படி நிறைவேற்றிய அமைச்சரவை தீர்மானம் உதவிகரமாக இருந்ததை குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே இதை வலியுறுத்தி அக்டோபர் 9 அன்று கூட விருக்கும் தமிழக சட்டப்பேரவையில் தங்கள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.'' இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications