சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அ.தி.மு.க பிரசார மேடையில் ஒலித்த ஹிந்தி பாட்டு.. அதுவும் குத்து பாட்டு.. பரபரப்பை உண்டாக்கிய சேலம்!

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் முதல்வர் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் ஹிந்தி பாடல் ஒலிபரப்பானதால் சலசலப்பு ஏற்பட்டது.

பல்வேறு குத்து பாடல்களை ஒலிக்கவிட்டு ஆபாச சைகைகளுடன் நடனமாடியது கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை முகம் சுளிக்க வைத்தது.

இறுதிக்கட்ட பிரசாரம்

இறுதிக்கட்ட பிரசாரம்

தமிழகத்தில் நாளை மறுதினம் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. பிரசாரம் செய்வதற்கு இன்று இறுதி நாள் என்பதால் வேட்பாளர்கள் தீவிர இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க பிரசார கூட்டம்

அ.தி.மு.க பிரசார கூட்டம்

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஓமலூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மணியை ஆதரித்து பிரசாரம் செய்தார். முதல்வர் வருவதற்கு முன்னதாக கூட்டம் அதிகளவில் வருவதற்காக அங்கு ஆடல்-பாடல் காலை நிகழ்ச்சி நடந்தது.

ஹிந்தி பாடல் ஒலிபரப்பு

ஹிந்தி பாடல் ஒலிபரப்பு

அப்போது தமிழ் பாடல்களுக்கும், குத்து பாடல்களுக்கும் நடன கலைஞர்கள் நடனமாடினார்கள். கூட்டத்துக்கு வந்த இளம்பெண்களும், இளைஞர்களும் குத்தாட்டம் போட்டனர். அப்போது ஒரு சில ஹிந்தி பாடல்களும் ஒழிக்க விட்டு அதற்கு நடன கலைஞர்கள் ஆட்டினார்கள். இதனால் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டத்துக்கு வந்திருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

முகம் சுளித்த பெண்கள்

முகம் சுளித்த பெண்கள்

மேலும் பல்வேறு குத்து பாடல்களை ஒலிக்கவிட்டு ஆபாச சைகைகளுடன் நடனமாடியது கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை முகம் சுளிக்க வைத்தது. தேர்தல் மேடைகளில் ஆபாச நடனத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. ஆனால் இதை காதில் போட்டுக் கொள்ளாமல் ஆளுங்கட்சியின் பிரசார கூட்டத்திலேயே விதிமீறல் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
The broadcast of a Hindi song at a campaign meeting attended by the Chief Minister in Salem caused a stir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X