சேலத்தில் கணவன் கேட்ட ஒரே கேள்வி.. தூங்கும் போது தலையில் அம்மி கல்லை போட்ட பத்மா
சேலம்: இன்றைக்கு கள்ளக்காதலும், முறையற்ற பழக்கங்களும் பல குடும்பங்களை காலி செய்கின்றன. அதேபோல் மது பழக்கமும், சந்தேகமும் பல குடும்ப உறவுகள் இன்று பிரிந்து செல்ல காரணமாக இருக்கின்றன. சில குடும்ப உறவுகள் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழக்கவும் கள்ளக்காதல், தவறான நடத்தை, மதுபழக்கம் காரணமாக இருக்கிறது. சேலத்தில் சந்தேகப்பட்ட கணவனை மனைவி என்ன செய்தார் தெரியுமா? இந்த செய்தியில் பார்ப்போம்.
திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இடையே புரிதல் பிரச்சனை காரணமாக சந்தேகம் வரும். புரிதல் ஏற்படும் வரை இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு.. ஏனெனில் கணவன் குடும்பத்தார் எப்படி என்று மனைவியும், மனைவியின் குடும்பத்தார் எப்படி என்று கணவனும் அறிந்து கொள்ளும் வரை பிரச்சனைகள் வரும். குறிப்பாக கணவன் குடும்பத்தில் எடுக்க வேண்டிய முடிவுகளை மனைவி தனது அம்மாவிடம் கேட்டு செய்வதே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதாக கணவன்கள் கூறுகிறார்கள். திருமணம் ஆன புதிதில் தம்பதி சந்திக்கும் சிக்கலுக்கு இது காரணமாக உள்ளது.

40 வயதில் சந்தேகம்
அதேநேரம் 40 வயதை நெருங்கும் போது, அல்லது திருமணம் ஆகி 15 அல்லது 20 வருடம் கழித்து திடீரென சந்தேகம் தம்பதியரிடையே வருகிறது. காரணம் வாழ்க்கை துணைக்கு ஏற்படும் சலிப்பால், வேறு ஒருவரை நாடுகிறாரா என்ற அச்சம் ஏற்படுகிறது. நடந்தையில் ஏற்படும் சந்தேகத்தால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கிறது. அப்படி வரும் பிரச்சனை கடைசியில் சிக்கலில் முடிகிறது. சேலத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
17 வருடம் வாழ்ந்த வாழ்க்கை
சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவைச் சேர்ந்த 40 வயதாகும் தங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பத்மாவுக்கு 40 வயது ஆகிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.
நடத்தையில் சந்தேகம்
இந்த நிலையில் பத்மா தனது கணவர் தங்கத்தின் உறவினர் ஒருவரை அடிக்கடி சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தை மீது தங்கத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அடிக்கடி வீட்டுக்கு மதுகுடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது
நேற்று முன்தினம் இரவு தங்கம் வீட்டுக்கு மதுபோதையில் வந்தார். அப்போது அவர் மனைவி பத்மாவிடம், "ஏன் எனது உறவினரிடம் அடிக்கடி பேசுகிறாய்?" என்று கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டாராம். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தங்கம் மனைவியை அடித்துவிட்டாராம்.
அம்மிக்கல்லை போட்ட மனைவி
இதையடுத்து தங்கம் மதுபோதை மயக்கத்திலேயே வீட்டில் படுத்துத் தூங்கினாராம். குழந்தைகளும் தூங்கிவிட்டனர். ஆனால் கணவரின் கொடுமையை கண்டு பத்மா ஆத்திரத்தில் இருந்துள்ளார். நாளுக்கு நாள் கணவரின் கொடுமையை நினைத்து பார்த்தபடியே இருந்த பத்மா, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுளளார். பின்னர் அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்துத் தூங்கித் கொண்டிருந்த கணவரின் தலையில் ஓங்கிப் போட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்தக் கொலை குறித்துத் தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தங்கத்தின் உடலைப் போலீசார் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கணவனைக் கொலை செய்தது தொடர்பாகப் பத்மாவைப் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். கணவனின் குடிப்பழக்கம், நடத்தை குறித்த சந்தேகத்தால் 3 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளன. இந்த இரண்டு தான் ஒரு குடும்பத்தை அழிக்க முக்கியமான காரணமாக இருக்கிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications